கருடன் அருகிருந்த மூர்த்தி
திருமாலின் வாகனமான கருடனுக்கு அருள்செய்த சிவனது திருக்கோலம் கருடன் அருகிருந்த மூர்த்தியாகும். இத்திருவுருவம் சிவனது அறுபத்து நான்கு திருக்கோலங்களில் ஒன்றாகும். சொல்லிலக்கணம்தொகுவேறு பெயர்கள்தொகுதோற்றம்தொகுஉருவக் காரணம்தொகுகைலையில் இருக்கும் சிவபெருமானின் தரிசனம் பெறுவதற்காக திருமால் கருட வாகனத்தில் சென்றார். சிவபெருமானின் காவலனான நந்திதேவனிடம் அனுமதி பெற்று திருமால் சிவதரிசனத்திற்கு சென்றுவிட, கருடன் வெளியில் நின்றார். சிவதரிசனத்தில் மூழ்கிய திருமால் திரும்பிவர நேரமானதால், கருடன் நந்திதேவனிடம் அனுமதி பெறாமல் உள்ளே செல்ல முயன்றார். இதனால் இருவருக்கும் சண்டை மூண்டது. நந்தி தேவனின் ஆவேச மூச்சில் கருடன் நிலைதடுமாறி விழுந்தார். தன்னைக் காக்க திருமாலை அழைத்தார். சிவதரிசனத்தில் இருந்த திருமால் சிவனிடம் வேண்ட, நந்தியிடம் கருடனை மன்னிக்குமாறு சிவபெருமான் வேண்டினார். அதனால் கருடன் காக்கப்பெற்றார். கோயில்கள்தொகுமேலும் காண்கதொகுமேற்கோள்கள்தொகு |