கருடன் கோயில்
கருடன் கோயில் (Garuda Temple) என்பது தென்னிந்திய மாநிலமான, கேரளத்தின், மலப்புறம் மாவட்டத்தின், திரிபரங்கோட்டில் உள்ள ஒரு கோயில் ஆகும். இது திரிபங்கோட்டில் சாம்ரவட்டம் சாலையில் அமைந்துள்ளது.
விஷ்ணுவின் வாகனமான கருடனுக்கு அர்பனிக்கபட்ட இந்தியாவின் ஒரே கோயில் இது என கருதப்படுகிறது. இந்தக் கோயிலின் கருவறையில் விஷ்ணுவின் கூர்ம அவதாரமான ஆமை வடிவ அவதார மூர்த்ததியாக காட்சியளிக்ககிறார். துறவி ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க விஷ்ணு தன் வாகனமான கருடனை இந்த இடத்ததிற்கு அனுப்பியதாக நம்பப்பகிறது. இக்கோயிலைச் சுற்றி உள்ள தங்கவண்ணப் பாம்புச் சிற்பங்கள் இக்கோயிலை அடையாளம் காட்டும்விதமாக உள்ளன. [1] சபரிமலை செல்லும் பல பக்தர்கள் இந்த கோயிலில் வழிபட்டு செல்கின்றனர்.[2]
குறிப்புகள்
தொகு- ↑ கேரளா ஒரு சுற்றுலா பார்வை, வி.கே.டி. பாலன், பக்கம் 314, மதுரா வெளியீடு, 2005 சென்னை
- ↑ https://www.keralatourism.org/destination/garuda-temple-triprangode/572