கருடா கட்சி

இந்தோனேசியா நாட்டின் அரசியல் கட்சிகளில் ஒன்றான மாறுதலுக்கான இந்தோனேசியாவின் பாதுகாவலர் கட்சியை பொதுவாக கருடா கட்சி என்று அழைப்பர். நவம்பர் 2007ல் நிறுவப்பட்ட இக்கட்சியின் தலைவர் அகமது ரிதா சப்னா மற்றும் பொதுச் செயலாளர் யோகன்னா மூர்திகா ஆவர்.[1] நடுநிலை அரசியல் தன்மை கொண்ட இக்கட்சி பஞ்சசீலக் கொள்கைகளை ஆதரிக்கிறது. இந்தோனேசியாவின் முதல் அதிபரான சுகர்ணோவின் மகளும், முதல் பெண் அதிபரான மேகவதி சுகர்ணோபுத்திரியுடன் இக்கட்சி தொடர்புடையது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Keputusan Carian: Abdullah Mansuri". Cendana News. PT. Media Cendana Nusantara. பார்க்கப்பட்ட நாள் 22 February 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருடா_கட்சி&oldid=4031567" இலிருந்து மீள்விக்கப்பட்டது