கருடா பேரங்காடி
கருடா மால் என்னும் கருடா பேரங்காடி, பெங்களூருவில் உள்ள பேரங்காடிகளில் ஒன்றாகும். இப்பேரங்காடி பிரைகேடு சாலையின் அருகே உள்ள மக்ரத் சாலையில் அமைந்துள்ளது. இப்பேரங்காடியின் இன்னுமொரு கிளையானது கே. ஆர். சர்கிள் அருகில் உள்ளது.
கருடா பேரங்காடியின் நுழைவுவாயில் | |
இருப்பிடம்: | பெங்களூர், கருநாடகம் இந்தியா |
---|---|
அமைவிடம் | 12°58′13″N 77°36′35″E / 12.970236°N 77.60975°E[1] |
முகவரி | மக்ரத் சாலை |
திறப்பு நாள் | மே, 2005 |
உரிமையாளர் | உதய் கருடாச்சர்; நிலம் பெரிய பெங்களூர் மாநகரப் பேரவை |
கடைகள் எண்ணிக்கை | 120 |
மொத்த வணிகத் தளப் பரப்பளவு | 126000 ச.மீ |
தள எண்ணிக்கை | 6 |
வலைத்தளம் | Official website |
இடம்
தொகுகருடா பேரங்காடியானது, 126,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. 30,000 சதுர மீட்டர் பரப்பளவில் பல்பொருள் அங்காடிகளையும், ஆறு மாடிகளையும், 180 அங்காடிகளையும் கொண்டுள்ளது.
பேரங்காடியிலுள்ள வசதிகள்
தொகு- வாகன நிறுத்துமிடம்
- பல்பொருள் அங்காடிகள்
- பொழுதுபோக்கு அரங்கம்
- திரையரங்கம்
- உணவகங்கள்
பிணக்குகள்
தொகு2005ஆம் ஆண்டு நடந்த உயர்த்தி விபத்திற்குப் பிறகு பாதுகாப்பு வசதிகள் அதிகப்படுத்தப்பட்டன[2]. 2007ஆம் ஆண்டு ஒருவர் மாடியில் இருந்து குதித்தார்.[2]
பெரிய பெங்களூர் மாநகரப் பேரவைக்கு சொந்தமான இடத்தில் இந்த பேரங்காடி கட்டப்பட்டுள்ளது.[2] கருடா பேரங்காடியும் பெரிய பெங்களூர் மாநகரப் பேரவையும் 52%-48% என்ற விகிதத்தில் வருமானத்தை பகிர்ந்து கொள்கின்றன.[2]
இவற்றையும் பார்க்கவும்
தொகு- பெங்களூரு சென்ட்ரல்
- த போரம்
- மந்த்ரி சதுக்கம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Garuda mall". Garudamall.net. 2014-01-09 இம் மூலத்தில் இருந்து 2013-10-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131002092227/http://www.garudamall.net/about-us/. பார்த்த நாள்: 2014-03-27.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Lift in Garuda Mall was overloaded". The Hindu (Chennai, India). 12 July 2005 இம் மூலத்தில் இருந்து 23 ஆகஸ்ட் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070823160208/http://www.hindu.com/2005/07/12/stories/2005071219170300.htm.