கருணா பத்வால்

இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்

கருணா பத்வால், இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த பெண் திரைப்படத் தயாரிப்பாளரும், இந்தி திரைப்பட நடிகரான ஷாருக்கானின் வணிக மேலாளருமாவார். நடிகர் ஷாரூக்கானுடன் இணைந்து, சென்னை எக்ஸ்பிரஸ்[1][2] மற்றும் ஹாப்பி நியூ இயர் போன்ற வெற்றிப் படங்களை கருணா தயாரித்து வெளியிட்டுள்ளார். இந்தி பொழுதுபோக்கு துறையில் சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக கருதப்படும் இவர், ரெட் சில்லிஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.[3]

கருணா பத்வால்
பிறப்புமும்பை, மகாராட்டிரம், இந்தியா
பணிதிரைப்படத் தயாரிப்பாளர்
வாழ்க்கைத்
துணை
ரவீந்தர் சிங் பத்வால்
பிள்ளைகள்ஹான்ஸ் பத்வால்
ஷம்ஸ் பத்வால்

தொழில்

தொகு

இந்தித் திரைப்பட உலகில் வணிக மேலாளராக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கியுள்ள இவர், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஷாருக்கானின் வணிக மேலாளராகப் பணியாற்றி வருகிறார்,[4] அவரின் தொழில் முயற்சிகள், வணிகங்கள் தவிர அவரது வியாபார குறியீட்டு ஒப்புதல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை கையாண்டு வருகிறார். ஷாருக்கானின் OTT இயங்குதளங்கள் மற்றும் திரைப்படங்கள் ஆகிய இரண்டிற்கும் உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கும் செயல்படுத்துவதற்கும் கருணாவின் நிறுவனமான ரெட் சில்லிஸ் பொறுப்பேற்றுள்ளது இருவரும் இணைந்து தயாரித்த சென்னை-எக்ஸ்பிரஸ், ஹாப்பி நியூ இயர் திரைப்படங்கள் தவிர ஜீரோ என்ற திரைப்படத்தையும் தயாரித்துள்ளார். ரா.ஒன் மற்றும் சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படங்களுக்காக ரெட் சில்லிஸ் நிறுவனத்தின் மூல சந்தைப்படுத்துதல் துறையின் தலைவராக, வலுவான பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கியுள்ளார்.KKR - கொலட்டா நைட் ரைடர்ஸ் என்ற இந்திய தொழில்முறைத் துடுப்பாட்ட அணியை ஷாருக்கான் நிறுவுவதற்கு கருணாவும் முக்கிய பங்காக இருந்துள்ளார். கிட்சானியா, என்ற இந்தியாவின் கல்வி முயற்சிக்கான குழுவில் இயக்குனராகவும் கருணா, இருந்துள்ளார்.[5][6]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

ரவீந்தர் சிங் பத்வால் என்பவரை கருணா திருமணம் செய்துள்ளார். இத்தம்பதியருக்கு ஹன்ஸ் பத்வால் மற்றும் ஷம்ஸ் பத்வால் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

திரைப்படவியல்

தொகு
ஆண்டு திரைப்படம் பங்கு
2013 சென்னை விரைவு இணை தயாரிப்பாளர்
2014 புத்தாண்டு வாழ்த்துக்கள் இணை தயாரிப்பாளர்
2018 பூஜ்யம் இணை தயாரிப்பாளர்

மேற்கோள்கள்

தொகு
  1. "Shah Rukh Khan's business manager turns co-producer for Chennai Express". hindustantimes.com.
  2. "I am very proud of the marketing that Red Chillies has done for 'Chennai Express', with Karuna (Badwal), Karim (Morani), Venky (Mysore)". dnaindia.com.
  3. "Karuna Badwal, Co-Producer, Red Chillies Entertainments Pvt. Ltd". timesofindia.indiatimes.com/.
  4. "Karuna Badwal". www.isb.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-27.
  5. "Shah Rukh Khan, Danny Denzongpa, Sonu Sood and other celebs offered their condolences on the sad passing of SRK's business manager Karuna Badwal's father Madan Mohan Arora". mid-day.com.
  6. "Karuna Badwal or Kareem Morani (producers at Red Chillies Entertainment), have ideas, which they should actuate". indianexpress.com/.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருணா_பத்வால்&oldid=4175234" இலிருந்து மீள்விக்கப்பட்டது