கருணை தமிழ் பெளத்தர்களுக்கான சர்வதேச புத்த மாநாடு
கருணை தமிழ் பெளத்தர்களுக்கான சர்வதேச புத்த மாநாடு (Karuna International Buddhist Conference for Buddhist Tamils) என்பது இலங்கை அரசு யாழ்ப்பாணத்தில் ஒழுங்கு செய்த ஓர் மாநாடு ஆகும். இது மே 20 திகதி நடைபெற்றது. தமிழ் பெளத்தர்களை ஒருங்கிணைக்கவும், சமய நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவும் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்படுவதாக இலங்கை அரசு கூறி உள்ளது.[1] இந்த மாநாட்டில் இந்தியாவிலும் இலங்கையில் இருந்தும் 300 சார்பாளர்கள் கலந்து கொண்டனர். பல இந்து சமயப் சார்பாளர்களும் கலந்து கொண்டனர். காஞ்சி சங்கர மட செயந்திர சரசுவதி இந்த மாநாட்டில் சிறப்பு விருந்துனராக கலந்து கொள்வதாக இருந்தது.[2]
யாழ்ப்பாணம் படைத்துறைமயமாக்கம், பெளத்தமயமாக்கம், சிங்களமயமாக்கத்துக்கு உட்பட்டு இருக்கும் சூழலில் இந்த மாநாடு ஒழுங்கமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.