கருத்தோவியம்

கருத்தோவியம் அல்லது கேலிச் சித்திரம் (cartoon) என்பது நகைச்சுவையைத் தூண்டும் வண்ணம் வரையப்படும் ஓவியம் ஆகும். பல சொற்களில் தலையங்கம் எழுதி உணர்த்த முடியாத கருத்துக்களை கருத்துப் படங்கள் எளிதாக உணர்த்துகின்றன. சமுதாயம், சமயம், அரசியல், பொருளாதாரத் துறைகளில் உள்ள குறைகளை நகைச்சுவையுடன் உணர்த்தும்படி கேலிப்படங்கள் அமைகின்றன. தமிழில் ஆனந்த விகடன், குமுதம், தினமணி போன்ற இதழ்களில் கேலிச் சித்திரங்கள் வெளி வருகின்றன. ஈழத்தில் சிரித்திரன் இதழில் வெளிவந்த கேலிச் சித்திரங்கள் புகழ் பெற்றவை.

சிரித்திரன்

சொற்பிறப்பியல்

தொகு

இத்தாலி மொழியில் Cartoon என்பது கெட்டியான காகிதத்தைக் குறிக்கும். கெட்டியான காகிதங்களில் தான் அப்போது அங்கே ஓவியங்கள் வரைவார்கள். 1921 ஆம் ஆண்டில் பிரிட்டனின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தை அலங்கரிக்க ஓவியர்களிடையே போட்டி ஒன்று நடத்தப்பட்டது. அந்தப் போட்டிக்காக (கெட்டியான காகிதங்களில்) வரையப்பட்ட பல ஓவியங்கள் நிராகரிக்கப்பட்டன. கேலிச் சித்திரங்கள் போன்று இருந்த நிராகரிக்கப்பட்ட சில ஓவியங்களை பஞ்ச் என்ற பத்திரிகை ஒன்றில் பஞ்ச் Cartoon என்ற தலைப்பில் ஒவ்வொன்றாகப் பிரசித்தி பெற்றது. காலப் போக்கில் இவ்வித கேலிச்சித்திரங்களுக்கு Cartoon என்ற பெயரில் நிலைத்து விட்டது[1].

நோக்கம்

தொகு

கருத்தோவியங்கள் அதிகமாக சில மனிதர்களை, அவர்களின் கொள்கைகளைக் கேலி செய்யும் விதமாக வரையப்படுகின்றன. குறிப்பாக கேலி செய்யப்படுபவர்கள் படங்களை நகைச்சுவையுணர்வுடன் அவர்களின் உருவம் அனைவரும் அறியும் வழியில் வரையப்படுகிறது. இந்தக் கேலிச் சித்திரங்கள் பிறர் மனத்தைப் புண்படுத்தாத வழியில் வரையப்படுகிறது. வரையப்படும் படங்கள் உண்மையின் அடிப்படையிலும், மக்களுக்கு சில செய்திகளைக் கூறும் வகையில் அதே சமயம் சிந்திக்க வைக்கும் வகையில் வரையப்படுகிறது.

தமிழ்நாட்டின் முதல் கருத்துப்படம்

தொகு

தமிழ்நாட்டில் முதன்முதலாக கருத்துப்படங்களை வெளியிட்டவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தான். இவர் ஆங்கிலேயர் ஆட்சியின் குறைகளை “இந்தியா” எனும் இதழில் கேலிச்சித்திரங்களின் மூலம் வெளியிட்டார்.[2]

இவற்றையும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Punch.co.uk. "History of the Cartoon". Archived from the original on 2007-11-11. பார்க்கப்பட்ட நாள் 2011-12-25.
  2. டாக்டர். மா.பா. குருசாமி எழுதிய “இதழியல் கலை” நூல், பக்கம்.182.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருத்தோவியம்&oldid=3827409" இலிருந்து மீள்விக்கப்பட்டது