கருநாடக இசையின் மும்மூர்த்திகள்

கருநாடக இசையின் சிறந்த விளங்கியவர்கள்

கருநாடக இசையின் மும்மூர்த்திகள் (Trinity of Carnatic music) என்பது18 ஆம் நூற்றாண்டில் கருநாடக இசையில் சிறந்த விளங்கிய தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகிய மூவரையும் குறிக்கிறது. இவர்கள் மூவரும் தற்போதுள்ள கருநாடக இசைப் பாரம்பரியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்ததன் மூலம் கருநாடக இசை வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியதற்காக அறியப்படுகின்றனர்.[1] இவர்களது இசையமைப்புகள் பாணியில் தனித்துவமாகவும், இராகங்களைக் கையாள்வதில் அசல் என்றும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[1] மூன்று இசைக் கலைஞர்களும் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த திருவாரூரில் பிறந்தவர்கள்.[2] 20 ஆம் நூற்றாண்டின் கருநாடக இசைக்கலைஞர்களான ம. ச. சுப்புலட்சுமி, தா. கி. பட்டம்மாள் மற்றும் எம். எல். வசந்தகுமாரி ஆகியோர் கருநாடக இசையின் பெண் மும்மூர்த்திகள் என்று பிரபலமாக குறிப்பிடப்படுகிறார்கள்.[3]

கருநாடக இசைக் கலைஞர்கள்
பெயர் ஆண்டுகள். தொகுப்புகளின் மொழி முத்திரை அறியப்படுவது
சியாமா சாஸ்திரிகள் 1762–1827 தெலுங்கு மற்றும் சமஸ்கிருதம் சியாமா கிருஷ்ணர் சிக்கலான தாளங்கள், சுவரஜதி
தியாகராஜர் 1767–1847 தெலுங்கு மற்றும் சமசுருதம் தியாகராஜர் பஞ்சரத்ன கீர்த்தனைகள்
முத்துசுவாமி தீட்சிதர் 1775–1835 சமசுகிருதம் மற்றும் மணிப்பிரவாளத்தில் சில குருகுஹா நோட்டு சுவரம், நவக்கிரக கிருதிகள்

பாடல்கள்

தொகு

முத்துசாமி தீட்சிதர் முக்கியமாக சமசுகிருதத்திலும், சில மணிப்பிரவாள நடையிலும் கிருதிகளை இயற்றினார். அதே நேரத்தில் தியாகராஜர் மற்றும் சியாம சாஸ்திரி ஆகிய இருவரும் முக்கியமாக தெலுங்கு மற்றும் சமசுகிருதம் ஆகிய மொழிகளில் கிருதிகளை இயற்றினார்கள்.[1]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Panikkar (2002), p44
  2. http://travel.sulekha.com/thiruvarur-a-land-of-culture-and-carnatic-music_travelogue_600372 [தொடர்பிழந்த இணைப்பு]
  3. India Today (in ஆங்கிலம்). Vol. 34. Thomson Living Media India Limited. 2009. p. 16. D.K. Pattammal 90, who along with M.S. Subbulakshmi and M.L. Vasanthakumar formed the female trinity' of Carnatic

குறிப்புகள்

தொகு
  • Panikkar, K N (2002). Culture, Ideology, Hegemony: Intellectuals and Social Consciousness in Colonial India. London: Anthem Press – Wimbledon Publishing Company.