கருநாடக நாட்டார் வழக்காற்றியல் பல்கலைக்கழகம்

கருநாடகா நாட்டார் வழக்காற்றியல் பல்கலைக்கழகம் (Karnataka Folklore University) என்பது கர்நாடகா ஜானபதா விசுவவித்யாலயா என்றும் அழைக்கப்படுகிறது.[2] இது இந்தியாவின் கருநாடகம் மாநிலத்தில் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்காகப் பிரத்தியேகமாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பொதுப் பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் 2011ஆம் ஆண்டு கர்நாடக அரசால் ஆவேரி மாவட்டத்தில் நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் அம்பலிகே அரியன்ன ஆவார்.[3]

கருநாடகா நாட்டார் வழக்காற்றியல் பல்கலைக்கழகம்
வகைபொது
உருவாக்கம்2011
வேந்தர்கருநாடக ஆளுநர்
துணை வேந்தர்டி. எம். பாசுகர்[1]
அமைவிடம்
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு
இணையதளம்www.janapadauniversity.ac.in/English/

இப்பல்கலைக்கழகம் உலகின் முதல் நாட்டுப்புறக் கலைகளுக்காக நிறுவப்பட்ட பல்கலைக்கழகம் என்று கூறப்படுகிறது.[4] இது 16 சூன் 2012 அன்று அப்போதைய கருநாடக முதல்வர் டி. வி. சதானந்த கவுடாவால் திறந்து வைக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் கருநாடாகவில் சிகாவ்ன், கோடகோடியில் அமைந்துள்ளது.[3] இங்கு நாட்டார் வழக்காற்றியலின் பல்வேறு துறைகளில் முதுகலை, மேலாண்மை, ஆய்வு நிறைஞர் மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளை வழங்குகிறது.[3]

துறைகள்

தொகு

பொது நாட்டுப்புறவியல்

தொகு
  • நாட்டுப்புறவியல் ஆய்வுகள் துறை

வாய்மொழி நாட்டுப்புறவியல்

தொகு
  • நாட்டுப்புற இலக்கிய ஆய்வுத் துறை

பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகள்

தொகு
  • நாட்டுப்புறக் கலைகளில் ஆய்வுத் துறை

பாரம்பரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

தொகு
  • பாரம்பரிய அறிவு அமைப்புகளின் ஆய்வுத் துறை

உரைவடிவ ஆய்வுகள்

தொகு
  • கிராமப்புற மற்றும் பழங்குடியினர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆய்வுத் துறை
  • மகளிர் ஆய்வுகள் துறை
  • பழங்குடியினர் ஆய்வுத் துறை

பயன்பாட்டு நாட்டுப்புறவியல்

தொகு
  • சுற்றுலா மற்றும் பயண மேலாண்மைத் துறை
  • இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை
  • கிராமப்புற மற்றும் பழங்குடியினர் மேலாண்மைத் துறை

சமூக அறிவியல்

தொகு
  • சமூகவியல் துறை
  • சமூகப் பணித் துறை
  • பொருளியல் துறை

மானுடவியல்

தொகு
  • கன்னடம் மற்றும் நாட்டுப்புறவியல் துறை
  • ஆங்கிலத் துறை
  • காட்சிக் கலைத் துறை
  • ஊடக நிகழ்த்துக் கலைத் துறை

மேற்கோள்கள்

தொகு
  1. "Vice Chancellor". www.janapadauniversity.ac.in. Janapada University. பார்க்கப்பட்ட நாள் 25 December 2018.
  2. Both names used by the university, e.g. "About us > Introduction". Karnataka Folklore University. Archived from the original on 12 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 12 July 2017.
  3. 3.0 3.1 3.2 "Shiggaon opens gateway to folk studies" இம் மூலத்தில் இருந்து 2013-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103182224/http://articles.timesofindia.indiatimes.com/2012-06-17/hubli/32281691_1_folk-art-new-varsity-higher-studies. பார்த்த நாள்: 20 September 2012. 
  4. "Worlds First University for Folklore Set Up in Karnataka". India Wires. 18 June 2012 இம் மூலத்தில் இருந்து 12 ஆகஸ்ட் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160812223510/http://indiawires.com/11490/news/state-news/worlds-first-university-for-folklore-established-in-karnataka/. பார்த்த நாள்: 13 July 2017. 

வெளி இணைப்புகள்

தொகு