கருப்பு ஆடையணிந்த பெண்கள்

கருப்பு  ஆடையணிந்த பெண்கள் ( Women in Black ) என்பது உலகெங்கிலும் 10,000 ஆர்வலர்களைக் கொண்ட பெண்களின் போர் எதிர்ப்பு இயக்கமாகும். 1988 இல் எருசலேமில் தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் வன்முறைக் கலவரங்கள் வெடித்ததைத் தொடர்ந்து இஸ்ரேலிய பெண்களால் முதல் குழு உருவாக்கப்பட்டது.

நியூயார்க்கில் உள்ள நியூ பால்ட்ஸ் நகரில் கருப்பு நிற ஆடையணிந்த பெண்கள் போராட்டம் நடத்துகின்றனர்

வரலாறு தொகு

 
எருசலேமில் உள்ள பாரிஸ் சதுக்கத்தில் மூன்று மொழிகளில் "ஆக்கிரமிப்பை நிறுத்து" என்று எழுத்தப்பட்டுள்ள தனித்துவமான கருப்பு நிறுத்தப் பலகைகளுடன் கருப்பு  ஆடையணிந்த பெண்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இஸ்ரேலியப் படையினரால் மனித உரிமைகள் கடுமையாக மீறப்படுவதாக அவர்கள் கருதியதற்குப் பதிலளித்து, மத்திய எருசலேமில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பெண்கள், மோதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் துக்கம் தெரிவிக்கும் வகையில் கருப்பு ஆடைகளை அணிந்து விழிப்புணர்வு நடத்தினர். ஆரம்பத்தில் குழுவிற்கு எந்தப் பெயரும் இல்லை. ஆனால் அது கருப்பு ஆடைகளுடன் விரைவாக அடையாளம் காணப்பட்டது, இது புறக்கணிக்க கடினமாக இருந்த தனித்துவமான ஆர்ப்பாட்டங்களை உருவாக்க உதவியது. [1]

இந்த முயற்சி விரைவில் இஸ்ரேலின் பல்வேறு இடங்களுக்கும் பரவியது. பெண்கள் வாரந்தோறும் நகரங்களின் முக்கிய சதுக்கங்களில் அல்லது நகரங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலைகளில் சந்திப்புகளில் நின்று கொண்டிருந்தனர். ஆரம்பத்திலேயே முடிவு செய்தபடி, ஆக்கிரமிப்புக்கு எதிரான எதிர்ப்பைத் தவிர வேறு எந்த முறையான திட்டத்தையும் இயக்கம் ஏற்கவில்லை. ஆண்களும் இதில் பங்கேற்பதா வேண்டாமா என்பது போன்ற பிரச்சினைகளைத் தீர்மானிப்பதில் உள்ளூர் குழுக்கள் தன்னாட்சி பெற்றன.

மோதலின் உச்சக்கட்டத்தில் நாடு முழுவதும் வெவ்வேறு இடங்களில் முப்பது விழிப்புணர்வுகள் நடைபெற்றன. 1993 ஆம் ஆண்டு ஓசுலோ உடன்படிக்கைக்குப் பிறகு, பாலஸ்தீனியர்களுடன் சமாதானம் நெருங்கிவிட்டதாகத் தோன்றியபோது, இந்த எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. பின்னர், வன்முறை நிகழ்வுகள் மீண்டும் அதிகரித்தது.

விருதுகள் தொகு

2001 ஆம் ஆண்டில், பெண்களுக்கான ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டு நிதி யத்தால் வழங்கப்பட்ட பெண்களுக்கான மில்லினியம் அமைதிப் பரிசு இந்த இயக்கத்திற்கு வழங்கப்பட்டது. அதே ஆண்டு, இஸ்ரேலிய மற்றும் செர்பிய குழுக்கள் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டன. [2]

உசாத்துணை தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு