கருப்ப சேர்வை

இந்திய விடுதலைப் போராட்டம்

கருப்பசேர்வை கொங்கு நாட்டு ஓடாநிலைக் கோட்டை பாளையக்காரர் தீரன் சின்னமலையிடம் சேர்ந்து பிரிடிஷ்காரர்களுக்கு எதிராக யுத்தம் செய்தவர்.[1] தீரன் சின்னமலையிடம் திறை வசூலிக்க வந்த சங்ககிரி திவான் மீராசாகிப்பின் படை வீரர்களை கருப்பசேர்வை விரட்டியடித்தார். மைசூர் மன்னர் திப்பு சுல்தானுடன் கூட்டணி சேர்ந்து, சின்னமலை மற்றும் கருப்பசேர்வை, கம்பெனி ஆட்சிக்கு எதிராக பெரும்படை திரட்டிப் போரிட்டனர். கம்பெனிப் படைகளுக்கு எதிராக, 1801இல் ஈரோடு காவிரிக் கரையிலும், 1802இல் ஓடாநிலைக் கோட்டையிலும், 1804-ல் அரச்சலூரிலும் நடந்த போர்களில் கருப்பசேர்வை தலைமையிலான தீரன் சின்னமலை படைகள் பெரும் வெற்றி பெற்றன.

கள்ளிக் கோட்டையிலிருந்து பெரும் அளவில் வந்த ஆங்கிலேய பீரங்கிப் படைகள் ஓடாநிலைக் கோட்டையைத் தகர்த்து, சின்னமலையுடன் கருப்பசேர்வை கைது செய்த, ஆங்கிலேயப் படைகள் சங்ககிரிக் கோட்டையில் இருவரையும் 31 ஆகத்து 1805 அன்று தூக்கிலிட்டனர்.

மேற்கோள்கள்

  1. "மறுகாலனிய ஆதிக்கத்தை எதிர்ப்போம்". தினமணி (27 அக்டோபர், 2012)

ஆதார நூற்பட்டியல்

  1. தமிழக்கோட்டைகள்--- க. இலக்குமி நாராயணன் சேலம் மாவட்டம் பக்கம் 43
  2. தீரன் சின்னமலைக் கவுண்டர் -- செ.ராசு-- பக்கம் 66

இதனையும் காண்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருப்ப_சேர்வை&oldid=2972521" இலிருந்து மீள்விக்கப்பட்டது