கருவுணவுப் படலம்

கருவுணவுப் படலம் (vitelline membrane) அல்லது கருவுணவு உறை (vitelline envelope) என்பது சூல் முட்டையின் முதலுருமென்சவ்வின் வெளிப்புற மேற்பரப்பைச் சுற்றியுள்ள ஒரு கட்டமைப்பாகும். பறவைகள் போன்ற சில விலங்குகளில், இது கலவெளி நுகத்தையும் அண்டத்தையும் கூட சூழ்ந்தமைவதுண்டு. இது பெரிதும் புரத நாரிழிகளால் ஆனதாகும். இதில் விந்துக்கள் ஒட்டிக்கொள்ள புரத ஏற்பிகள் அமைகின்றன, இந்தப் புரத ஏற்பிகள் விந்துக் கலக்கணிகப் படல புரத ஏற்பிகளோடு ஒட்டிக்கொள்கின்றன. இந்த ஏற்பிகள் இனஞ்சார்ந்தமைதலால், இவை இனங்களிடையிலான இனப்பெருக்கத்தைத் தடை செய்கின்றன. பாலூட்டிகளில் இது கருசூழ் ஒளிப்படலம் (zona pellucida) எனப்படுகிறது. கருவுணவுப் படலத்துக்கும் கருசூழ் ஒளிப்படலத்திற்கும் நடுவில் நீர்மம் நிறைந்த புறக்கருவெளி அமைகிறது.

கருவுணவுப் படலம்
Vitelline membrane
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்membrana vitellina
MeSHD014817
உடற்கூற்றியல்

விந்தணு சூல் முட்டையுடன் இணைந்தவுடன், குறிகைக் கடத்துகை ஏற்படுகிறது, இதன் விளைவாக கலக்கணிகத்தில் குழியமுதலுருவுக்குரிய கால்சியம் மின்னணுக்களின் எண்ணிக்கையை உயர்த்தி, புறணி எதிர்வினையைத் தூண்டிவிடுகிறது. இதனால் உருவாகும் புறணிக் குறுணைகளின் புறக்கலமிகை, கருவுணவுப் படலத்தின் மீது பல பொருட்களைப் படியச் செய்து, அப்படலத்தை வன்மையான கருவுறல் அடுக்காக” உருமாற்றுகிறது. இது மேலும் விந்துக்கலங்களை நுழையவொட்டாமல் செய்யும் அரணாகிறது. இந்நிகழ்வு அண்ட முனைவாக்கம் அல்லது பலவிந்து நுழைவுத் தடுப்பு எனப்படுகிறது.

பூச்சிகளில், கருவுணவுப் படலம் கருவுணவு உறை எனப்படுகிறது. இது கருக்கழிவுப் படலத்தின் அகணியாக அமைகிறது.

உசாத்துணைகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருவுணவுப்_படலம்&oldid=3738682" இலிருந்து மீள்விக்கப்பட்டது