கரேலியனைட்டு
ஆக்சைடு கனிமம்
கரேலியனைட்டு (Karelianite) என்பது V2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். வனேடியம் மூவாக்சைடின் இயற்கைத் தோற்றம் கரேலியனைட்டு ஆகும். இதுவோர் அரிய கனிமமாகும். வேதியியலின் அடிப்படையில் இது ஏமாடைட்டு, குருந்தம், எசுகோலைட்டு, திசுட்டாரைட்டு, பிக்சுஸ்பைட்டு, அவிசென்னைட்டு மற்றும் இட்ரியடைட்டு-(Y) ஆகியவற்றின் வனேடியம் ஒப்புமையாகக் கருதப்படுகிறது. இந்த பெயர் பின்லாந்து-உருசிய எல்லையில் உள்ள கரேலியாவிலிருந்து வந்ததாகும். கரேலியனைட்டு மக்னீசியம் நிறைந்த பாறைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.[1]
கரேலியனைட்டு Karelianite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | கனிமம் |
வேதி வாய்பாடு | V2O3 |
இனங்காணல் | |
நிறம் | கருப்பு |
மிளிர்வு | உலோகத் தன்மை |
ஒப்படர்த்தி | 4.95 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Karelianite: Mineral information, data and localities". www.mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2019-04-10.