கர்டர்பூர் போர்

கர்டர்பூர் போர் (Battle of Kartarpur) என்பது 1635 இல் கர்டர்பூரின் மேல் தொடுக்கப்பட்ட முற்றுகைப் போரைக் குறிக்கும். இம்முற்றுகைப் போரை முகலாய மன்னர் நடத்தினார். இதுவே முகலாய-சீக்கியர் போர்களின் கடைசிப் போராகும்[1]. ஆறாவது சீக்கிய மதகுரு அர்கோவிந்துக்கு எதிரான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக முகலாயப் படை பாண்டேகான் தலைமையில் கர்டர்பூர் முற்றுகைப் போரை நிகழ்த்தியது. பாய்பித்கி சந் உடன் குரு அர்கோவிந்தும் அவர் மகன் பாபாகுர்திட்டாவும் கர்டர்பூர் முற்றுகையை எதிர்த்து நின்றனர். முகலாயப்படை சீக்கியர்களால் கடுமையாக முறியடிக்கப்பட்டது. மேலும் முகலாயர்கள் பல தளபதிகளை இழந்தனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Jaques, Tony. Dictionary of Battles and Sieges. Greenwood Publishing Group. p. 513. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-33536-5. பார்க்கப்பட்ட நாள் 31 July 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்டர்பூர்_போர்&oldid=2179620" இலிருந்து மீள்விக்கப்பட்டது