கர்தினால் குழாமின் பொருளாளர்
கர்தினால் குழாமின் பொருளாளர் (ஆங்கில மொழி: Camerlengo/Chamberlain of the Sacred College of Cardinals) இவர் கத்தோலிக்கத் திருச்சபையில் கர்தினால் குழாமின் கணக்கர் ஆவார். கர்தினால் குழாமின் அனைத்துச் சொத்துக்களையும், அவற்றின் பராமரிப்பு , நிதி மற்றும் வருவாயினை நிர்வகிப்பது இவரின் பணியாக இருந்தது. மேலும் இறந்த கர்தினாலுக்காகத் திருப்பலி நிறைவேற்றுவதும், ஆலோசனைக்குழுவின் செயல்பாடுகளைப் பதிவு செய்வதும் இவரின் பணியாக இருந்தது.
1150இல் திருத்தந்தை மூன்றாம் யூஜினால் இப்பதவி நிறுவப்பட்டதாக எண்ணப்பட்டாலும் திருத்தந்தை மூன்றாம் இன்னசெண்டின் காலம் வரை, குறிப்பாக 1272க்கு முன்னர் இப்பதவி இருந்ததற்குச் சான்றாக எவ்வித ஆவணமும் இல்லை.[1]
1997இல் இப்பதவி தேவையற்றதானதால், கலைக்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ I.S.Robinson, The Papacy 1073-1198. Continuity and Innovation, Cambridge University Press 1990, p. 41 and 253, says that Cardinal Cencio was Camerlengo of the College during pontificate of Innocent III, but W. Maleczek, Papst und Kardinalskolleg von 1191 bis 1216, Wien 1984, p.112, doubt it. The first undisputed occupant of that post was Guillaume de Bray in 1272