கர்நாடகா சமசுகிருத பல்கலைக்கழகம்
கர்நாடகா சமசுகிருத பல்கலைக்கழகம் (Karnataka Sanskrit University) என்பது இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் சமசுகிருத மொழியின் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டிற்காகத் தோற்றுவிக்கப்பட்டதாகும்.
குறிக்கோளுரை | प्रज्वालितो ज्ञानमयः प्रदीपः |
---|---|
வகை | மாநில அரசுப் பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 2010 |
வேந்தர் | வஜுபாய் வல்லா[1] |
துணை வேந்தர் | கே. ஈ. தேவநாதன் |
அமைவிடம் | , |
வளாகம் | நகரம் |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு |
இணையதளம் | www |
வரலாறு
தொகுஇப்பல்கலைக்கழகம் 2010ஆம் ஆண்டு கர்நாடக அரசால் நிறுவப்பட்டது. கர்நாடக சமசுகிருத பல்கலைக்கழகம் சமசுகிருத மொழி வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகமாகும். சமசுகிருதம் அறிவார்ந்த, அறிவியல், இலக்கிய, கலாச்சார பாரம்பரியம் கொண்ட மொழியாகும்.[சான்று தேவை]
கர்நாடகாவில் சமசுகிருதத்தினை கற்பிக்கும் 31 கல்லூரிகள் உள்ளன. மேலும் மாநிலம் முழுவதும் 243 வேதம் மற்றும் சமசுகிருத பாடசாலைகள் உள்ளன. சமசுகிருத பாடசாலைகளை நிர்வகிப்பதற்காகக் கர்நாடக அரசால் சமசுகிருத கல்வி இயக்குநரகம் நிறுவப்பட்டுள்ளது.[சான்று தேவை]
பல்கலைக்கழக அமைப்பு
தொகுகர்நாடக சமசுகிருத பல்கலைக்கழகம் முக்கியமாக நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவை:
- கற்பித்தல் பிரிவு
- ஆராய்ச்சி பிரிவு
- வெளியீட்டுப் பிரிவு
- நிர்வாக பிரிவு
இராமநகர் மாவட்டம், மாகடி வட்டம், குதுரு ஹோப்ளியில் இப்பல்கலைக் கழகத்திற்கு நூறு ஏக்கர் நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் தற்போது 2 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், 10 உதவி பெறும் இணைப்புக் கல்லூரிகள் மற்றும் 9 உதவி பெறாத இணைப்புக் கல்லூரிகளை இதன் வரம்பில் உள்ளடக்கியுள்ளது. இது கர்நாடகாவில் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கல்வியைக் கவனித்துக்கொள்வதற்காக சமசுகிருத கல்வி இயக்குநரகத்தை நிறுவியுள்ளது. இந்த இயக்குநரகம் மாநிலம் முழுவதும் 354 அங்கீகரிக்கப்பட்ட சமசுகிருத பாடசாலை கண்காணிக்கும் பணியினை உள்ளடக்கியது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Chancellor". Archived from the original on 2017-10-05. பார்க்கப்பட்ட நாள் 2021-11-05.
- ↑ "Sanskrit university convocation on June 14". The Hindu. 9 June 2013. பார்க்கப்பட்ட நாள் 30 June 2014.