கர்நாடகா விரைவுவண்டி
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
கர்நாடகா விரைவு ரயில் கர்நாடகாவின் தலைநகரான பெங்களூர் நகரத்திற்கும் இந்தியாவின் தலைநகரான புது டெல்லிக்கும் இடையே, தினசரி செயல்படும் ஒரு அதிவிரைவு ரயில்சேவையாகும். புது டெல்லியினை தென்னிந்தியாவின் இணைக்கும் ரயில்களில் முக்கியமான ரயில் இதுவாகும். அத்துடன் கால நேரத்தினை சரியாக பின்பற்றுவது மற்றும் வழக்கமான ரயில் வகையிலும் இந்த ரயில் மிகவும் பிரபலமானது.[1]
வரலாறு
தொகுஆரம்பத்தில் வாரத்திற்கு இருமுறை இயக்கப்படும் ரயிலாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ரயில்சேவை, பின்னர் வாரத்திற்கு மூன்று முறை என்று மாற்றப்பட்டது. கர்நாடகா விரைவு ரயில் மற்றும் கேரளா விரைவு ரயில் இரண்டும் ஜோலார்பேட்டை வரை ஒன்றாகச் செயல்பட்டது. அப்போது மிகவும் பிரபலமாக KK என அழைக்கப்பட்டது. இது போபால், நாக்பூர், விஜயவாடா மற்றும் ஜோலார்பேட்டை வழியாகச் செயல்பட்டது. வாரத்தின் எஞ்சிய இரு நாட்களில் இது ஆந்திர பிரதேச விரைவு ரயிலுடன் இணைந்து செயல்பட்டது. 1987 ஆம் ஆண்டு கேரளா விரைவு ரயிலில் இருந்து, கர்நாடகா விரைவுரயில் பிரிக்கப்பட்டது. அதன் பிறகு கர்நாடகா விரைவு ரயில் குண்டாக்கல், செகந்திராபாத் வழியாக செயல்படத் தொடங்கியது. அதன் பின்னர் வாடி, டௌன்ட், மான்மட், புசவால், இட்டரிசி மற்றும் போபால் வழியாக வழிமாற்றப்பட்டது. இதுதான் இதன் தற்போதைய வழித்தடமாகும்.
வழிப்பாதை மற்றும் நிறுத்தங்களுக்கான நேரங்கள்
தொகுஎண் | நிலையத்தின்
பெயர் (குறியீடு) |
வரும்
நேரம் |
புறப்படும்
நேரம் |
நிற்கும்
நேரம் |
கடந்த
தொலைவு |
நாள் |
---|---|---|---|---|---|---|
1 | பெங்களூர்
சந்திப்பு (SBC)[2] |
தொடக்கம் | 19:20 | 0 | 0 கி.மீ | 1 |
2 | பெங்களூர்
காண்ட் (BNC) |
19:30 | 19:32 | 2 நிமி | 5 கி.மீ | 1 |
3 | யெலங்கா
சந்திப்பு (YNK) |
19:58 | 20:00 | 2 நிமி | 27 கி.மீ | 1 |
4 | ஹிந்துபுர்
(HUP) |
21:14 | 21:15 | 1 நிமி | 111 கி.மீ | 1 |
5 | சாய்
பி நிலையம் (SSPN) |
22:03 | 22:05 | 2 நிமி | 168 கி.மீ | 1 |
6 | தர்மாவரம்
சந்திப்பு (DMM) |
22:53 | 22:55 | 2 நிமி | 201 கி.மீ | 1 |
7 | அனந்தபுர்
(ATP) |
23:29 | 23:30 | 1 நிமி | 235 கி.மீ | 1 |
8 | கூட்டி
(GY) |
00:29 | 00:30 | 1 நிமி | 292 கி.மீ | 2 |
9 | குண்டாக்கல்
சந்திப்பு (GTL) |
00:55 | 01:00 | 5 நிமி | 320 கி.மீ | 2 |
10 | அடோனி
(AD) |
01:39 | 01:40 | 1 நிமி | 372 கி.மீ | 2 |
11 | மாந்த்ரலாயம்
சாலை (MALM) |
02:38 | 02:40 | 2 நிமி | 413 கி.மீ | 2 |
12 | ராய்சூர்
(RC) |
02:59 | 03:00 | 1 நிமி | 441 கி.மீ | 2 |
13 | யாத்கிர்
(YG) |
04:00 | 04:02 | 2 நிமி | 510 கி.மீ | 2 |
14 | வாடி
(WADI) |
04:55 | 05:00 | 5 நிமி | 549 கி.மீ | 2 |
15 | குல்பர்கா
(GR) |
05:39 | 05:40 | 1 நிமி | 585 கி.மீ | 2 |
16 | சோலபுர்
சந்திப்பு (SUR) |
07:40 | 07:50 | 10 நிமி | 698 கி.மீ | 2 |
17 | குர்டுவாடி
(KWV) |
08:50 | 08:51 | 1 நிமி | 777 கி.மீ | 2 |
18 | டௌன்ட்
சந்திப்பு (DD) |
10:27 | 10:30 | 3 நிமி | 886 கி.மீ | 2 |
19 | அஹ்மட்நகர்
(ANG) |
11:57 | 12:00 | 3 நிமி | 970 கி.மீ | 2 |
20 | பீலபூர்
(BAP) |
12:56 | 12:57 | 1 நிமி | 1037 கி.மீ | 2 |
21 | கோபர்கௌன்
(KPG) |
13:39 | 13:40 | 1 நிமி | 1081 கி.மீ | 2 |
22 | மான்மட்
சந்திப்பு (MMR) |
14:45 | 14:55 | 10 நிமி | 1123 கி.மீ | 2 |
23 | ஜால்கௌன்
சந்திப்பு (JL) |
16:39 | 16:40 | 1 நிமி | 1282 கி.மீ | 2 |
24 | புசவால்
சந்திப்பு (BSL) |
17:10 | 17:20 | 10 நிமி | 1307 கி.மீ | 2 |
25 | புர்ஹான்புர்
(BAU) |
18:04 | 18:05 | 1 நிமி | 1361 கி.மீ | 2 |
26 | காண்ட்வா
(KNW) |
19:30 | 19:35 | 5 நிமி | 1430 கி.மீ | 2 |
27 | இட்டரிசி
சந்திப்பு (ET) |
21:50 | 21:55 | 5 நிமி | 1613 கி.மீ | 2 |
28 | போபால்
சந்திப்பு (BPL) |
23:25 | 23:30 | 5 நிமி | 1705 கி.மீ | 2 |
29 | பினா
சந்திப்பு (BINA) |
01:30 | 01:32 | 2 நிமி | 1843 கி.மீ | 3 |
30 | ஜான்சி
சந்திப்பு (JHS) |
03:33 | 03:45 | 12 நிமி | 1996 கி.மீ | 3 |
31 | குவாலியர்
(GWL) |
04:54 | 04:59 | 5 நிமி | 2093 கி.மீ | 3 |
32 | ஆக்ரா
காண்ட் (AGC) |
06:40 | 06:45 | 5 நிமி | 2212 கி.மீ | 3 |
33 | மதுரா
சந்திப்பு (MTJ) |
07:35 | 07:37 | 2 நிமி | 2265 கி.மீ | 3 |
34 | எச்
நிசாமுதீன் (NZM) |
09:58 | 10:00 | 2 நிமி | 2399 கி.மீ | 3 |
35 | புது
டெல்லி (NDLS) |
10:30 | முடிவு | 0 | 2406 கி.மீ | 3 |
வண்டி எண்
தொகுஇது 12627[3] மற்றும் 12628[4] என்ற வண்டி எண்களுடன் செயல்படுகிறது. இரு ரயில் சேவைகளிலும் உணவகம் மற்றும் பொதுவான சமையல் வசதி உள்ளது. சுமார் 2410 கிலோ மீட்டர் தூரத்தினை மணிக்கு 61 கிலோ மீட்டர் வேகத்தில் கடக்கும் இந்த ரயில் 33 ரயில் நிறுத்தங்களைக் கொண்டு செயல்படுகிறது.
விபத்துக்கள்
தொகு1991 ஆம் ஆண்டு, பெங்களூரில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மகலிடுர்கா எனும் பகுதியில் கர்நாடகா விரைவுரயில் விபத்துக்குள்ளது. இது மழைபொழியும் மாலைப்பொழுதில் நடைபெற்றது. இந்த விபத்தினால் 30 பேர் உயிரிழந்தனர்.
குறிப்புகள்
தொகு- ↑ "Karnataka Express (12628) Running Train Status". runningstatus.in. பார்க்கப்பட்ட நாள் 10 October 2015.
- ↑ "Karnataka Express Route". cleartrip.com. Archived from the original on 14 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 10 October 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "12627/Karnataka Express (PT)". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 10 October 2015.
- ↑ "12628/Karnataka Express (PT)". indiarailinfo.com. பார்க்கப்பட்ட நாள் 10 October 2015.