கர்நாடக பிராமணர்கள்

இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு

கர்நாடக பிராமணர்கள் ( Karnataka Brahmin) என்பவர்கள் இந்திய மாநிலமான கர்நாடகாவைப் பூர்வீகமாகக் கொண்ட பஞ்ச திராவிட பிராமணச் சமூகங்கள் ஆவர். இவர்கள் கர்நாடகாவில் "கன்னட நாடு" (கன்னடம் பேசும் பகுதி) மற்றும் " துளு நாடு " (துளு பேசும் பகுதி) ஆகிய இடங்களின் அடிப்படையில் இரண்டு துணைப்பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. கன்னட நாட்டு பகுதியைச் சேர்ந்த கர்நாடக பிராமணர்கள் கன்னடம் பேசுவதால், கன்னட பிராமணர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அதே நேரத்தில் கர்நாடகாவின் துளு நாடு பகுதியைச் சேர்ந்த கர்நாடக பிராமணர்கள் துளு பேசுகிறார்கள். இவர்கள் துளுவ பிராமணர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். [1] [2]

வகைப்பாடு தொகு

இவர்கள் இந்தியாவில் பிராமண சமூகத்தின் பஞ்ச திராவிட பிராமண வகைப்பாட்டின் கீழ் வருகிறார்கள். [3] இவர்கள் மூன்று முக்கிய துணைப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர், ஸ்மார்த்தர், மத்வ பிராமணர்கள் மற்றும் சிறீ வைணவர். இவர்களின் ஒவ்வொருவரின் கீழும் பல துணைப்பிரிவுகள் உள்ளன. [4] [5]

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்நாடக_பிராமணர்கள்&oldid=3022384" இலிருந்து மீள்விக்கப்பட்டது