கர்பில்லிக்காவு மகாதேவர் கோயில்

கேரளத்தின், எர்ணாகுளம் மாவட்டதில் உள்ள சிவன் கோயில்

கர்பில்லிக்காவு ஸ்ரீ மகாதேவர் கோயில் (Karppillikkavu Sree Mahadeva Temple) என்பது இந்தியாவின், கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் மஞ்சப்பாரா கிராமத்தில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இந்த கோயிலின் ஒரு சிறப்பு என்னவென்றால், தெய்வம் மேற்கு பக்கத்தை நோக்கி தரிசனம் அளிக்கிறார். இக்கோயில் சிவன் கிராதமூர்த்தி சங்கல்பத்தில் உள்ளார். அதாவது வேட்டைக்காரன் வடிவம். இவர் கார்த்தவீரிய அருச்சுனனால் பிரதிட்டை செய்யப்பட்டார் என்ற தொன்மக்கதை உள்ளது.

கர்பில்லிக்காவு மகாதேவர் கோயில்
கர்பில்லிக்காவு மகாதேவர் கோயில்
கர்பில்லிக்காவு மகாதேவர் கோயில் is located in கேரளம்
கர்பில்லிக்காவு மகாதேவர் கோயில்
கேரளத்தில் அமைவிடம்
கர்பில்லிக்காவு மகாதேவர் கோயில் is located in இந்தியா
கர்பில்லிக்காவு மகாதேவர் கோயில்
கர்பில்லிக்காவு மகாதேவர் கோயில் (இந்தியா)
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளம்
மாவட்டம்:எர்ணாகுளம்
அமைவு:மஞ்சப்பாரா
ஆள்கூறுகள்:10°12′7.72″N 76°27′8.92″E / 10.2021444°N 76.4524778°E / 10.2021444; 76.4524778
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கேரளப் பாரம்பரியம்
இணையதளம்:http://karppillikkavusreemahadevatemple.com

கண்ணுக்குத் தெரியாத ஒரு பாதாள வழி இக்கோயிலின் கிணறு மற்றும் குளத்தை அணைத்துச் சென்று, பின்னர் 30 கி.மீ கிழக்கே ஓடி ஒரு மாயக் கோயிலின் குளத்தை முடிந்து, அங்கு அபூர்வ மருத்துவ குணங்கள் கொண்ட மரக்கூட்டத்தை உருவாக்கி உள்ளது என்பது பக்தர்களின் நம்புகிறார்கள்.

இந்தக் கோயிலில் எட்டு நாட்கள் ஆராட்டு பூரம் விழா தொடர்ந்து நடக்கிறது. ஏழாம் நாள், ஏழு கோயில் யானைகள் மஞ்சப்பாரா வழியே பஞ்சவாத்தியம் ஒலிக்க வண்ணமயமான உர்வலம் நடப்பது காணத்தக்கது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. கலைமாமணி வீ.கே.டி. பாலன் (2005). உங்களை வரவேற்கிறது கேரளா ஒரு சுற்றுலா பாரவை. சென்னை: மதுரா வெளியீடு. p. 107.