கர்பி மேகாலயா பீடபூமி

கர்பி மேகாலயா பீடபூமி (Karbi-Meghalaya Plateau) இந்தியத் தீபகற்பப் பீடபூமியின் விரிவாக்கமாகும். இது முதலில் இரண்டு வெவ்வேறு பீடபூமிகளாக இருந்ததாகும். இவை கர்பி ஆங்கலாங் பீடபூமி மற்றும் சில்லாங் பீடபூமி ஆகும்.

மேகாலயா பீடபூமி பாரம்பரியமாக காரோ, காசி மற்றும் ஜைண்டியா மலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கிழக்கில் தன்சிரி ஆற்றுப்பகுதியிருந்து மேற்கில் சிங்கிமாரி ஆறு வரை சுமார் 400 கிமீ நீளமும், சராசரியாக 40 கிமீ அகலமும், சுமார் 35,291 கிமீ2 பரப்பளவும் கொண்டுள்ளது.[1]

கர்பி பீடபூமி பேரிக்காய் வடிவத்தில் சுமார் 7000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. மேகாலயா பீடபூமியுடன் இதன் இணைப்பு தெற்கே மிகவும் சிதைந்த மற்றும் முதுமை நிலப்பரப்பின் ஒரு பகுதி வழியாக உள்ளது.[2]

விவரங்கள்

தொகு

இமயமலை தோன்றிய நேரத்தில் இந்தியத் தட்டின் வடகிழக்கு நோக்கிய இயக்கத்தால் ஏற்பட்ட சக்தியின் காரணமாக, ராஜ்மகால் மலைகளுக்கும் கர்பி மேகாலயா பீடபூமிக்கும் இடையில் ஒரு பெரிய பிளவு உருவானது என்று நம்பப்படுகிறது. பின்னர், இந்தத் தாழ்வுநிலையானது ஏராளமான ஆறுகளின் படிவு நடவடிக்கைகளால் நிரப்பப்பட்டது. இன்று மேகாலயா மற்றும் கர்பி ஆங்கலாங் பீடபூமி பிரதானத் தீபகற்பத் தொகுதியிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் தென்மேற்கு பருவமழை அதிகபட்சமாகப் பெய்யும். இது இந்தியாவின் வடகிழக்கு பீடபூமியில் அமைந்துள்ளது .[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Saikia, Partha. "Meghalaya Plateau". North East India Info.
  2. Saikia, Partha. "Karbi Plateau". North East India Info.
  3. Vasudevan, Hari; et al. (2006). "Structure and Physiography". India:Physical Environment. New Delhi: NCERT. p. 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7450-538-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்பி_மேகாலயா_பீடபூமி&oldid=4143103" இலிருந்து மீள்விக்கப்பட்டது