தன்சிரி ஆறு

தன்சிரி (Dhansiri) என்பது அசாம் மாநிலம் கோலாகாட் மாவட்டம் மற்றும் நாகாலாந்து மாநிலம் திம்மாபூர் மாவட்டத்தில் பாயும் முக்கிய ஆறு. இது நாகாலாந்தின் லைசாங் சிகரத்திலிருந்து உருவாகிறது. தெற்கிலிருந்து வடக்கு நோக்கி 352 கிலோமீட்டர்கள் (219 mi) பாய்ந்து பிரம்மபுத்திராவில் அதன் தென் கரையில் கலக்கின்றது. இதன் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதி 1,220 சதுர கிலோமீட்டர்கள் (470 sq mi) ஆகும்.[1]

தன்சிரி ஆறு
கோலாகாட் அருகே தன்சிரி ஆறு
அமைவு
நாடுஇந்தியா
அமைவிடம்அசாம், நாகலாந்து, வட கிழக்கு இந்தியா
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுலைசாங் சிகரம்
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
பிரம்மபுத்திரா ஆறு
நீளம்352 km (219 mi)

கர்பி அங்லாங்கிற்கும் நாகாலாந்திற்கும் இடையிலான எல்லையாகப் பாயும் போது, வனவிலங்குகளில் மிகுதியாகக் காணப்படும் பெரிய வனப்பகுதியைக் கொண்டுள்ளது. இதன் ஒருபுறம் தன்சிரி பாதுகாக்கப்பட்ட காடு, மறுபுறம் இன்டாங்கி தேசிய பூங்கா உள்ளது.[2]

இன்டாங்கி வனப்பகுதியில் ஆற்றங்கரையில் பல வகையான முக்கியமான மரங்கள் உள்ளன.[3] இப்பகுதியில் ஏராளமான வற்றாத நீரில் மூழ்கிய சதுப்பு பகுதி உள்ளது.

அஹோம் புரான்ஜிஸில், இது கே-நாம்-டி-மா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நீர்நிலை இடத்திலிருந்து வரும் ஒரு நதி. (கே = ஒரு நதி, நம் = நீர், டி = இடம், மா = வரும்).[4]

மீன்கள்

தொகு

2011-12 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், மீன்களில் 34 சிற்றினங்கள் இனம் காணப்பட்டன. இவை ஐந்து வரிசைகளில், பதின்மூன்று குடும்பங்கள் மற்றும் 24 பேரினங்களைச் சார்ந்தவை. பதினேழு வகையான சைப்ரினிஃபார்ம்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து எட்டு வகையான கெளிறு மீனினங்கள் காணப்பட்டன.[5] திமாபூரில் உள்ள தன்சிரி ஆற்றில் பல்வேறு பகுதிகளில் காணப்படும் அலங்கார மீன் இனங்கள் உள்ளன.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Geography of Golaghat". Government of Assam. Archived from the original on 6 January 2009. பார்க்கப்பட்ட நாள் 2007-12-21.
  2. Choudhury, A.U. (2009). A Naturalist in Karbi Anglong. Revised 2nd edn. (1st pub. 1993), Gibbon Books, Guwahati, India. 152pp.
  3. "Brief documentation of Dhansiripar Block". Government of Nagaland. Archived from the original on 2007-06-27. பார்க்கப்பட்ட நாள் 2007-12-21.
  4. Borua, Gopal Chandra. Ahom-Assamese-English dictionary (PDF). Calcutta. p. 40. Archived from the original (PDF) on 2022-01-29. பார்க்கப்பட்ட நாள் 2021-03-29.
  5. Acharjee, Biswajit Kumar; Das, Madhurima; Borah, Papari; Purkayastha, Jayaditya (1 November 2012). "Ichthyofaunal Diversity of Dhansiri River, Dimapur, Nagaland, India". Check List 8 (6): 1163–1165. doi:10.15560/8.6.1163. https://www.biotaxa.org/cl/article/view/8.6.1163#:~:text=River%20Dhansiri%20is%20an%20important,the%20Dhansiri%20river%20till%20date.. பார்த்த நாள்: 11 June 2020. 
  6. Acharjee, Biswajit Kumar; Das, Madhurima; Borah, Papari; Purkayastha, Jayaditya (1 November 2012). "Ichthyofaunal Diversity of Dhansiri River, Dimapur, Nagaland, India". Check List 8 (6): 1163–1165. doi:10.15560/8.6.1163. https://www.biotaxa.org/cl/article/view/8.6.1163#:~:text=River%20Dhansiri%20is%20an%20important,the%20Dhansiri%20river%20till%20date.. பார்த்த நாள்: 11 June 2020. 

 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்சிரி_ஆறு&oldid=3651830" இலிருந்து மீள்விக்கப்பட்டது