கெளிறு

மீன் வரிசை
கெளிறு மீன் (பூனை மீன்)
புதைப்படிவ காலம்:பிந்தைய கிரீத்தேசியக் காலம் - தற்காலம் வரை
ஈல் வால் கெளுத்திமீன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
பெருவரிசை:
ஆசுடாரியோபைசி
வரிசை:
சைலுரிபார்மிசு

கெளிறு அல்லது கெழுது (கெளுத்தி மீன் என்று பேச்சு வழக்கில் அழைக்கின்றனர்.) என்பது கடலிலும், நன்னீரிலும் வாழும் மீன் குடும்பம் ஆகும். இதில் ஆயிரக்கணக்கான வகைகள் உள்ளன. இவற்றுக்குச் செதில்கள் கிடையாது. இவற்றின் தொடுமுளைகள் பூனையை நினைவுபடுத்துவது போல உள்ளதால் இவை மேனாட்டில் பூனை மீன்கள் என்று அறியப்படுகின்றன. எனவே இதை பூனை மீன் (cat fish) என்றும் அழைப்பதுண்டு.

அமைப்பு

தொகு

மித தட்பவெப்ப, வெப்ப வலயங்களில் உள்ள நாடுகளின் ஆறுகளில் கெளிறு மீன்கள் அதிகம் காணப்படுகின்றன. தமது வாழ்க்கையின் பெரும்பகுதியை இந்த மீன்கள் ஆழமான நீர்நிலைகளில் அடித்தளத்தில் கழிக்கின்றன. இவை குப்புறப் படுத்துக் கிடப்பதால் இவற்றின் உடல் மேலிருந்து கீழ் ஓரளவு தட்டையாக இருக்கும். கெளிறு மீனின் உடல் மேற்புறம் கருத்தும் அடிப்புறம் வெளுத்தும் இருக்கும். இவற்றின் ஊற்று உறுப்புகளான மீசைகள் ஆழ்நீர் வாழ்வில் பெரும் பங்காற்றுகின்றன. மீசைகள் நன்கு வளர்ச்சியுற்றவை. மாறாக, இருளில் அதிக உபயோகமில்லாத கண்கள் வளர்ச்சி குன்றியவை. கெளிறுகள் மிகப் பெரும்பான்மையாக இரவில் சஞ்சரிக்கின்றன. பகல் வேளைகளில் அவை குழிகளிலும், கயங்களிலும் ஒளிந்து கொள்ளும். புழுக்கள் போல் நெளியும் இவற்றின் மீசைகள் சிறு மீன்களைக் கவர்ந்து இழுக்கும். சிறு மீன் மீசைகளைப் பிடிக்க முயலும் போது கெளிறு தனது அகன்ற வாயைச் சட்டென்று திறந்து அதைப் பற்றி விழுங்கிவிடும். பெரிய கெளிறுகள் நீர்ப்பறவைகளையும் தாக்கும்.[1]

உணவுப் பயன்பாடு

தொகு

பெரும்பாலான நாடுகளில் இவை உணவாக உண்ணப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்காவில் 1987 ஆம் ஆண்டு முதல் சூன் 25 ஆம் நாள் கெளிறு மீன் தினமாகக் கொண்டாடப்படுகிறது. செதில்கள் இல்லாத காரணத்தால் யூதர்கள் மற்றும் ஷியா முஸ்லிம்கள் இவற்றை உண்பதில்லை.

மேற்கோள்கள்

தொகு
  1. வ.ஷாலாயேவ், நி. ரீக்கவ் எழுதிய “விலங்கியல்” நூல் பக்கம்:177
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெளிறு&oldid=3292804" இலிருந்து மீள்விக்கப்பட்டது