அக்டினோட்டெரிகீயை

அக்டினோட்டெரிகீயை
புதைப்படிவ காலம்:Late Silurian–Recent
Herring2.jpg
அத்திலாந்திக் ஹெரிங்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: அக்டினோட்டெரிகீயை
கிளீன், 1885
துணைவகுப்புக்கள்

கொண்ட்ரோஸ்டீ
நியோப்தெரிகீ

அக்டினோட்டெரிகீயை (Actinopterygii), என்பது நடுமுள் துடுப்புள்ள மீன்களைக் குறிக்கும். இம் முதுகுநாணி மீன்களின்(Osteichthyes)[1][2] ஒரு வகுப்பு ஆகும். எண்ணிக்கையைப் பொறுத்தவரை அக்டினோட்டெரிகீ வகுப்பு முதுகுநாணிகளுள் முக்கியமான ஒரு வகுப்பு ஆகும். 30,000க்கு மேற்பட்ட மீன் இனங்களுள் ஏறத்தாழ 99% இனங்கள் அக்டினோட்டெரிகீயை வகுப்புக்குள் அடங்குகின்றன.[3] இவ் வகுப்பைச் சேர்ந்த மீனினங்கள், நன்னீரிலும், கடல் சூழல்களிலும், ஆழமான கடல் பகுதிகளில் இருந்து மலையுச்சிச் சிற்றாறுகள் வரை எங்கும் பரவிக் காணப்படுகின்றன. அளவைப் பொறுத்தவரை, 8 மில்லிமீட்டரே நீளம் கொண்ட பீடொசிப்பிரிசு இனத்திலிருந்து, 2300 கிலோ கிராம் நிறை கொண்ட பெருங்கடல் சூரியமீன் (Ocean Sunfish), 11 மீட்டர் நீளம் கொண்ட ஓர்மீன் (Oarfish) வரையில் பல்வேறு வகையான இவ்வகுப்பில் உள்ளன.

மேற்கோள்கள்தொகு

இவற்றையும் பார்க்கவும்தொகு

வெளி இணைப்புகள்தொகு

விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Actinopterygii
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்டினோட்டெரிகீயை&oldid=3230772" இருந்து மீள்விக்கப்பட்டது