கர்மா டாப்தென்

இந்திய அரசியல்வாதி

கர்மா டாப்தென் (Karma Topden) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1941 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக சிக்கிம் மாநில அரசியலில் ஈடுபட்டார்.[1]

சிக்கிம் சட்டமன்றத்தின் மூத்த உறுப்பினராக இருந்த மார்தம் டாப்தெனின் மகனாக கர்மா டாப்தென் பிறந்தார். டார்ச்சிலிங் நகரத்தில் உள்ள செயின்ட் இயோசப் பள்ளியில் பயின்றார் ('நார்த்பாயிண்ட்டு') பின்னர் இங்கிலாந்தில் உள்ள மான்செசுடர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். சிக்கிமில் ஒரு காவல்துறை அதிகாரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் அப்போதைய ஆட்சியாளர் அலுவலகத்தில் நிர்வாக அதிகாரியாக ஆனார். 1975 ஆம் ஆண்டில் சிக்கிம் இந்தியாவின் மாநிலமாக மாறிய பிறகு, இவர் இந்திய நிர்வாக சேவையில் சேர்க்கப்பட்டார்.

1988-1993 மற்றும் 1994-2000 ஆண்டுகளில் இரண்டு முறை இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் வரை டாப்தென் சிக்கிம் அரசாங்கத்தில் பல்வேறு மூத்த பதவிகளை வகித்தார். பின்னர் மங்கோலியாவுக்கான இந்திய தூதராக இரண்டு ஆண்டுகள் நியமிக்கப்பட்டார். [2]

2018 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 4 ஆம் தேதியன்று தன்னுடைய 77 ஆவது வயதில் இவர் காலமானார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Gangtok - Karma Tenzing Topden, a trusted friend and an amiable person - The Echo of India". பார்க்கப்பட்ட நாள் 19 August 2018.
  2. "List of Rajya Sabha members Since 1952".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கர்மா_டாப்தென்&oldid=3879068" இலிருந்து மீள்விக்கப்பட்டது