கறுப்பு மலர் (சிற்றிதழ்)

1980களில் வெளியான தமிழ் சிற்றிதழ்

கறுப்பு மலர் என்பது தமிழ் நாட்டில் இருந்து 1980களில் மாத இதழாக வெளிவந்த ஒரு தமிழ்ச் சிற்றிதழ் ஆகும்.[1]

கறுப்பு மலரின் முதல் இதழ் 1983 மே அன்று வெளி வந்தது. இந்த இதழானது கவிஞர் பாரதிப்ரியா, இளைஞர் இலக்கிய வட்டம் அமைப்புக்காகத் தயாரித்த தனிச்சுற்றிதழ் ஆகும். மக்களுக்கான மக்கள் இலக்கியம் படைப்பது இளம் எழுத்தாளர்களை, கவிஞர்களை ஊக்குவிப்பது மாதம் ஒரு கருத்தரங்கம், கவியரங்கம் நடத்துவது; சமூகப் பிரச்னைகளை ஆராய்வது அவற்றுக்கான தீர்வை நோக்கி விவாதிப்பது, புதுப் படைப்பாளிகளை வரவேற்பது; அவர்கள் புதுமைப் படைப்புகளை படைக்கத் தூண்டுவது; மக்கள் மத்தியில் விழிப்பு உணர்ச்சியை ஏற்படுத்துவது மக்கள் இலக்கியத்தின் அருமையை மக்களுக்கு உணர்த்துவது; சாதி மத அமைப்புகளைச் சாராதிருப்பது, மடமைகளை எதிர்ப்பது இவற்றை இளைஞர் இலக்கிய வட்டம் தன் நோக்கங்களாக கொண்டு இந்த இதழை வெளியிட்டது.[1]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 281–283. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கறுப்பு_மலர்_(சிற்றிதழ்)&oldid=3450040" இலிருந்து மீள்விக்கப்பட்டது