கற்குழம்புப் பாறை

கிளிமஞ்சாரோ மலை ஏறும் வழியில் உஃகுரு உச்சியை அடையும் முன் உள்ள உயரமான இடத்தின் பெயர்

கற்குழம்புப் பாறை என்பது கிளிமஞ்சாரோ மலை ஏறும் வழியில் உஃகுரு உச்சியை அடையும் முன் உள்ள உயரமான இடத்தின் பெயர். மலையேறுநர்கள் இவ்விடத்தில் கூடாரம் அடித்து இரவில் தங்குவது வழக்கம். இங்கு உறைந்த கற்குழம்பால் ஆன உயரமான பாறை உள்ளது இதனால் இதற்குக் கற்குழம்புப் பாறை அல்லது லாவா டவர் என்று பெயர். இதன் உயரம் 4642 மீ. இங்கிருந்து பார்த்தால் முகில் கூட்டங்கள் முகாமுக்குக் கீழே தெரியும். இங்கும் குங்குரு என்னும் வெண்கழுத்துக் காக்கையைப் பார்க்கலாம். நால்வரி எலிகளையும் மலைக்குருவிகள் சிலவற்றையும் இங்கு காணலாம்.

கிளிமஞ்சாரோ மலை ஏறும் வழியில் கற்குழம்புப் பாறை என்னும் முகாமில் இருந்து காணும் காட்சி. உயரம் 4642 மீ
கற்குழம்புப் பாறை. இவ்விடத்தில் கிளிமஞ்சாரோ மலையேறுநர்கள் சிலர் முகாம் இடுவர். இதன் உயரம் 4642 மீ
"https://ta.wikipedia.org/w/index.php?title=கற்குழம்புப்_பாறை&oldid=3813952" இலிருந்து மீள்விக்கப்பட்டது