கற்கோவில்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கற்கோவில் (Home Church) தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தென் இந்திய திருச்சபையின் தலைமை ஆலயமாகும். இது நாகர்கோவில் நகரின் மையத்தில் அமைந்துள்ளது.
வரலாறு
தொகுகுமரி மாவட்டத்தில் இன்றைய தென் இந்திய திருச்சபையின் ஒரு அங்கமான லண்டன் மறைபரப்புக்கான(London Mission) அடித்தளம் 1809ம் ஆண்டு மயிலாடியில் ரிங்கிள் தௌபெ என்பவரால் தொடங்கப்பட்டது. அப்போது அதன் தலைமையகம் மயிலாடியில் செயல்பட்டு வந்தது. பின்னர் அது 1818ம் ஆண்டு நாகர்கோவிலுக்கு மாற்றப்பட்டது. அங்கு அதற்கான அலுவலகம் கற்கோவிலுக்கு எதிரில் இருக்கும் பெண்கள் கிறித்தவ கல்லூரி வளாகத்தில் செயல்பட்டது. 1819ம் ஆண்டு லண்டன் மறைபரப்பு அலுவலகத்திற்கு எதிரில் கற்கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 127 அடி நீளமும் 66 அடி அகலத்திலும் இந்த ஆலயம் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தின் அடித்தளம் முதல் மேல்தளம் வரை முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டதால் கற்கோவில் என்ற பெயர் பெற்றது. திருவிதாங்கூர், கொச்சி, தஞ்சாவூர் மற்றும் ஆங்கிலேய அரசுகளால் நிதியுதவி அளிக்கப்பட்டு இக்கோவில் உருவாக்கப்பட்டது. 1843ம் ஆண்டு இக்கோவில் வழிபாடு தொடங்கியது.
ஆலய வளர்ச்சி
தொகுஇவ்வாலயம் தொடங்கும் போது 4 குடும்பங்களும் 13 உறுப்பினர்களுமே இருந்தனர். தற்போது (2011ல்) ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களும் சுமார் 8000 உறுப்பினர்களையும் கொண்டு இயங்குகின்றது.