கற்பூரவல்லி
கற்பூரவல்லி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Lamiales
|
குடும்பம்: | Lamiaceae
|
பேரினம்: | |
இனம்: | P. amboinicus
|
இருசொற் பெயரீடு | |
Plectranthus amboinicus (Lour.) Spreng. | |
வேறு பெயர்கள் | |
Coleus amboinicus Lour. |
கற்பூரவல்லி அல்லது கற்பூரவள்ளி (Coleus aromaticus) என்பது ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது, புதராக வளருகின்றது. வாசனை மிக்கதான இதன் இலைகள் தடிப்பாகவும், மெதுமெதுப்பாகவும், விளிம்பு, கூர்மையற்ற பற்கள் போல் காட்சி தரும். கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் கொண்ட இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இத்தாவரம் முழுவதும் மெல்லிய ரோம வளரிகள் உண்டு. மலர்களின் நிறம் ஊதா. இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது.
பெயர் காரணம்
தொகுமணம் மிக்க இலைகளைக் கொண்டதால், ‘கற்பூர’வள்ளி எனும் பெயர் இதற்கு உண்டானது. பொதுவாக மணமுள்ள பொருட்களுக்கு ‘கற்பூர’ எனும் முன்மொழி சேர்க்கப்படுவது வழக்கம். ‘வள்ளி’ என்றால் ‘படைப்பு’ என்ற பொருளில், வாசனையுள்ள படைப்பாக ‘கற்பூர வள்ளி’ எனும் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம். விரைவாக நோய்களை விரட்டுவதால், கற்பூர ‘வல்லி’ (வல்லி - விரைவு) என்றும் அழைக்கப்படுகிறது.[1]
பாடல்களில் கற்பூரவள்ளி பற்றி
தொகுஅகத்தியர் குணபாடம்
தொகுகாச இருமல் கதித்தம சூரியயையம்
பேசுபுற நீர்க்கோவை பேருங்காண் -வீசுசுரங்
கற்பாறை யொத்துநெற்சிற் கட்டுகபம் வாதமும்போங்
கற்பூர வள்ளிதனைக் கண்டு
தேரையர் குணபாடம்
தொகுகற்பூர வள்ளியின் கழறிலை யைத்தின
நற்பாலர் நோயெலா நாசமா யகலுமே
மேற்கோள்கள்
தொகு- ↑ டாக்டர் வி.விக்ரம் குமார் (27 அக்டோபர் 2018). "ஆரோக்கியத்தின் 'கற்பூரம்!'". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2018.