கலப்பு உலோக ஆக்சைடு மின்முனை
கலப்பு உலோக ஆக்சைடு மின்முனை (Mixed metal oxide electrodes) என்பவை மின்வேதியியல் மின்னாற்பகுப்பு வினைகளில் பயன்படுத்தப்படும் நேர்மின் முனையாகும். மிகுந்த பயனுள்ள சாதனமாக இம்மின்வாய் பயன்படுகிறது. மேற்பரப்பில் பல்வேறு வகையான உலோக ஆக்சைடுகளைப் பெற்றிருக்கும் என்பதே மின்வாய் என்ற சொல்லின் பொருளாகும். வழக்கமாக RuO2, IrO2,அல்லது PtO0.12, போன்றவற்றில் ஒன்று மின்வினையூக்கியாக பயன்படுத்தப்படும். இம்மின் வினையூக்கி மின்சாரத்தையும் கடத்தும் அதே சமயத்தில் குளோரின் வாயு உற்பத்தி போன்ற விரும்பத்தக்க வினையூக்கியாகவும் செயல்படுவது ஒரு வகையாகும். மற்றொரு உலோக ஆக்சைடான தைட்டானியம் டையாக்சைடு மின்சாரத்தை கடத்துவதும் இல்லை. வினையூக்கியாகவும் செயல்படுவதில்லை. ஆனால் விலைமதிப்பு குறைந்தும் உட்புறத்தை அரிமானத்திலிருந்து பாதுகாக்கவும் செய்கிறது. தைட்டானியம் தகடு அல்லது தைட்டானியம் வலைக்கண்ணில் மின்முனையில் உருவாகும் தளப்பொருள் சேர்கிறது.
தளத்தில் கிடைக்கும் அரிய உலோகத்தின் அளவு ஒரு சதுர மீட்டருக்கு 10 முதல் 12 கிராம் ஆக இருக்கும் [1].
நீச்சல்குளத்தில் இருக்கும் உப்பு நீரிலிருந்து தனிநிலை குளோரின் தயாரிக்கும் மின்பகுப்பு கலனில் நேர்மின்முணையாகப் பயன்படுத்த கலப்பு உலோக ஆக்சைடுகள் பயன்படுகின்றன. உலோகம் வெளிக் கொணர் மின்முறையிலும் இம்மின்வாய்கள் பயன்படுகின்றன. எஃகுக்கு மின்முலாம் பூசவும், மின்சுற்றுப் பலகைகள் தயாரிப்பிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Reverse electrodialysis: Evaluation of suitable electrode systems" பரணிடப்பட்டது 2013-07-21 at the வந்தவழி இயந்திரம், Chapter 4 of the doctoral thesis of Joost Veerman, 2009, p. 70.