கலா கோடா

மும்பையின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள ஒரு பிறை வடிவ கலை நகரம்

கலா கோடா (Kala Ghoda) என்பது இந்தியாவின் மும்பையின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள ஒரு பிறை வடிவ கலை நகரமாகும்.[1] அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் மற்றும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கராலயம், ஜஹாங்கீர் கலைக்கூடம், தேசிய நவீன கலைக்கூடம் மற்றும் கலை அறக்கட்டளை-தற்கால இந்திய கலை நிறுவனம் போன்ற கல்வி நிறுவனங்கள் உட்பட நகரின் பல பாரம்பரிய கட்டிடங்கள் இங்கு உள்ளன.[2]

கலா ​​கோடா கலை வளாகம்
கலை நகரம்/அண்மைப்பகுதி
கலா கோடா சிலை
கலா கோடா சிலை
கலா ​​கோடா கலை வளாகம் is located in Mumbai
கலா ​​கோடா கலை வளாகம்
கலா ​​கோடா கலை வளாகம்
மும்பையில் கலா கோடாவின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 18°55′51″N 72°49′59″E / 18.9307°N 72.8331°E / 18.9307; 72.8331
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மெட்ரோமும்பை
அஞ்சல் குறியீட்டு எண்
400032
'Kala Ghoda signage'

இப்பகுதி ஆண்டுதோறும் பிப்ரவரியில் கலைக் கூட கலை விழாவை நடத்துகிறது. கிழக்கே மும்பை துறைமுகத்தின் கப்பல்துறை, தெற்கே மும்பை ரீகல் சினிமா, வடக்கே உதாத்மா சௌக் மற்றும் புளோரா நீரூற்று மற்றும் மேற்கில் ஓவல் மைதானம் ஆகியவற்றுக்கு இடையே இந்தப் பகுதி அமைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை இதன் வடகிழக்கில் உள்ளது.

வரலாறு

தொகு

காலா கோடா என்ற பெயர் யூதத் தொழிலதிபரும் பரோபகாரருமான ஆல்பர்ட் அப்துல்லா டேவிட் சாசூன் என்பவரால் கட்டப்பட்ட குதிரையின் மீது அமர்ந்துள்ள அப்போதைய வேல்ஸ் இளவரசர் ஏழாம் எட்வர்ட்டின் கருங்கல் சிலையைக் குறிக்கிறது. இருப்பினும் பின்னர் இந்த சிலை அகற்றப்பட்டது. 1965 இல் பைகுல்லா உயிரியல் பூங்காவிற்குள் வைக்கப்பட்டது. இந்தியாவின் நுழைவாயிலில் உள்ள எட்வர்ட் மன்னர் மற்றும் சிவாஜியின் ஒரு குதிரையின் சிலை நள்ளிரவுக்குப் பிறகு உயிர் பெற்று தெருக்களில் சண்டையிட்டதாக ஒரு உள்ளூர் புராணக்கதை கூறுகிறது. [3] 2017 ஆம் ஆண்டில், 'கலா கோடா' போன்ற தோற்றமுடைய குதிரையின் புதிய சிலை கலா கோடா சங்கத்தால் அமைக்கப்பட்டது. ‘கலா கோடாவின் நம்பிக்கை’ என்று பெயரிடப்பட்ட இந்த சிலை கட்டிடக் கலைஞர் அல்பாஸ் மில்லரால் வடிவமைக்கப்பட்டது. ஸ்ரீஹரி போஸ்லேவால் செதுக்கப்பட்டது.[4] [5]

மேற்கோள்கள்

தொகு
  1. Kala Ghoda, Mumbai: India's Emerging Art District wsj.com. Retrieved 4 September 2021
  2. "Kala Ghoda Association » Kala Ghoda Arts Festival". Archived from the original on 6 September 2014. பார்க்கப்பட்ட நாள் 6 September 2014.
  3. Revenge of the native - LiveMint
  4. "Mumbai: Over 50 yrs on, Kala ghoda returns today" (in en-US). The Indian Express. 2017-01-03. http://indianexpress.com/article/cities/mumbai/mumbai-over-50-yrs-on-kala-ghoda-returns-today-4456297/. 
  5. "Kala Ghoda in Mumbai gets its dark horse back without King Edward VII" (in en). hindustantimes.com/. 2017-01-03. http://www.hindustantimes.com/mumbai-news/kala-ghoda-in-mumbai-gets-its-dark-horse-back-without-king-edward-vii/story-wepqTCkJ2JokJUQc3ScRUK.html. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலா_கோடா&oldid=4025390" இலிருந்து மீள்விக்கப்பட்டது