கலிபோர்னியம்(III) ஆக்சிபுளோரைடு
வேதிச் சேர்மம்
கலிபோர்னியம்(III) ஆக்சிபுளோரைடு (Californium(III) oxyfluoride) CfOF என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டல் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கதிரியக்கப் பண்பு கொண்ட இச்சேர்மம் 1960 ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டது. கனசதுர புளோரைட்டு கட்டமைப்பில் இந்த உப்பு படிகமாகிறது. கட்டமைப்பில் ஆக்சைடு மற்றும் புளோரைடு எதிர்மின் அயனிகள் சீரற்ற முறையில் எதிர்மின்னயனி தளத்தில் பகிரப்பட்டிருக்கும்.[1]
Crystal form of californium oxyfluoride
| |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
கலிபோர்னியம்(III) ஆக்சிபுளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
22840-46-6 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
CfFO | |
வாய்ப்பாட்டு எடை | 286.00 g·mol−1 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம் |
Lattice constant | a = 556.1 ± 0.4 பைக்கோமீட்டர் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கலிபோர்னியம்(III) ஆக்சிபுளோரைடு என்பது ஆக்சி புளோரைடும் கலப்பு எதிர்மின் அயனியும் சேர்ந்த ஒரு சேர்மமாகும். கலிபோர்னியம்(III) புளோரைடை உயர் வெப்பநிலையில் நீராற்பகுத்தல் வினைக்கு உட்படுத்தி இது தயாரிக்கப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Peterson, J.R.; Burns, John H. (November 1968). "Preparation and crystal structure of californium oxyfluoride, CfOF". Journal of Inorganic and Nuclear Chemistry 30 (11): 2955–2958. doi:10.1016/0022-1902(68)80155-1.