கலிபோர்னியம் இருகுளோரைடு

வேதிச் சேர்மம்

கலிபோர்னியம் இருகுளோரைடு (Californium dichloride) என்பது CfCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கலிபோர்னியமும் குளோரினும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1] கலிபோர்னியம் டைகுளோரைடு என்ற பெயராலும் இது அடையாளப்படுத்தப்படுகிறது.

கலிபோர்னியம் இருகுளோரைடு
Californium dichloride
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இருகுளோரோகலிபோர்னியம்
வேறு பெயர்கள்
கலிபோர்னியம்(II) குளோரைடு
இனங்காட்டிகள்
99643-99-9
ChemSpider 64885668
InChI
  • InChI=1S/Cf.2ClH/h;2*1H/q+2;;/p-2
    Key: ZLTRAJDZJNQTLH-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
  • [Cf+2].[Cl-].[Cl-]
பண்புகள்
CfCl2
வாய்ப்பாட்டு எடை 321.90 g·mol−1
தோற்றம் அம்பர் திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

கலிபோர்னியம்(III) குளோரைடு சேர்மத்தை ஐதரசனுடன் சேர்த்து 600 பாகை செல்சியசு வெப்பநிலையில் ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் கலிபோர்னியம் இருகுளோரைடு உருவாகும்.[2][3]

இயற்பியல் பண்புகள்

தொகு

கலிபோர்னியம் இருகுளோரைடு சேர்மம் ஈரப்பதத்திற்கு உணர்திறன் கொண்டு அம்பர் என்ற திண்மப்பொருளாக உருவாகிறது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "WebElements Periodic Table » Californium » californium dichloride". webelements.com. பார்க்கப்பட்ட நாள் 16 April 2024.
  2. J.R., Peterson; R.L., Fellows; R.G., Haire; J.P., Young (1977). "Stabilization of californium(II) in the solid state" (in en). Radiochemical and Radioanalytical Letters 31 (4–5). https://inis.iaea.org/search/search.aspx?orig_q=RN:9404280. பார்த்த நாள்: 16 April 2024. 
  3. 3.0 3.1 Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 2825. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 16 April 2024.