கலைக்கமல் இலங்கையில் புகழ்பெற்ற ஒரு மெல்லிசைப்பாடகராவார். 1977 ஆம் ஆண்டு முதல் பாட ஆரம்பித்த கலைக்கமல் 2009 ஆம் ஆண்டு வரையும் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். மேடை, வானொலி, தொலைக்காட்சி பாடகராகி இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் பாடியிருக்கிறார். எழுத்தாளராக விளங்கும் இவர் புதுக்கவிதை, சிறுகதை, மரபுக்கவிதை, இசைச் சித்திரம், நாடகம், பாடல் போன்றவற்றை எழுதி இலக்கியத்துறையிலும் பிரசித்தி பெற்றதுடன் 1980 ஆம் ஆண்டு புதுக்கவிதையில் முதன் முதலில் "ஓடக்குழல்' என்னும் காதல் தொடர் கவி கதையை தினகரன் தேசிய பத்திரிகையில் 4 மாதங்கள் தொடராக எழுதி பாராட்டைப் பெற்றவர்.

கலைக்கமல்
பின்னணித் தகவல்கள்
பிறப்பு இலங்கை
இசை வடிவங்கள்மெல்லிசைப் பாடல்
தொழில்(கள்)பாடகர், எழுத்தாளர்
இசைத்துறையில்1977 – இன்று

இசைப்பணி தொகு

அயாஸ் பயாஸின் "சுப்பர் சன்ஸ்' கே.சி. பாலேந்திராவின் "ரெயின்போ' இசைக் குழுக்களில் முதன்மை பாடகராக திகழ்ந்த கலைக்கமல் இலங்கையில் உள்ள பல்வேறு இசைக்குழுக்களுடன் பாடுயுள்ளார். "வசந்த கீதங்கள்' என்ற தனது பாடல் ஒலி நாடாவை வெளியிட்டதுடன் நடிகமணி அபுநானா கே. ஏ. ஜவாகர் குழுவினரின் ஐந்து நகைச்சுவை ஒலிநாடாக்களையும் வெளியிட்டுள்ளார். கலைக்கமல் 1992 ஆம் ஆண்டு ஒரு மாத காலம் சுவிட்சர்லாந்தில் பல பாகங்களிலும் பாடி புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களைக் கவர்ந்தவர். இதுவரை மூன்று முறை சுவிஸ் நாட்டில் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.இவரது தனிமனித இசை நிகழ்ச்சிகள் பல அண்மையில் அரங்கேறியிருக்கின்றன.

டி. எம். சௌந்தரராஜனுடனும், இசைமுரசு ஈ. எம். ஹனீபாவுடனும் ஒரே மேடையில் பாடிய நிகழ்வை மறக்க முடியாது என்கிறார் கமல்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலைக்கமல்&oldid=3699782" இலிருந்து மீள்விக்கப்பட்டது