கலைமகள் (இதழ்)
கலைமகள் இதழ் தமிழில் வெளிவரும் பழைமையான மாத இதழ். தமிழகத்தில் இவ்விதழ் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு 1932. தற்போதைய கலைமகள் இதழின் பொறுப்பாசிரியர் கீழாம்பூர். ஆசிரியர் ஆர்.நாராயணஸ்வாமி. [1]
மக்களிடையே பிரபலமாக இருந்த இதழ். பொழுதுபோக்கு இதழாக இல்லாமல் உயர்ந்த இலக்கியங்களுக்கு இடமளித்துப் புகழ் பெற்ற இதழ். 1940களில் மணிக்கொடி எழுத்தாளர்களின் கதைகளும் இதில் வெளிவந்தன. பிரபல பிற மொழி எழுத்தாளர்களான காண்டேகர், பக்கிம் சந்திர சட்டர்ஜி, சரத் சந்திரர் போன்றோரின் எழுத்துக்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு கலைமகளில் வெளிவந்தன. [2]
1937 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இதன் ஆசிரியர் கி. வா. ஜகன்னாதன் . கா. ஸ்ரீ. ஸ்ரீயும் கலைமகள் குழுவில் இணைந்திருந்தவர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ கலைமகள்; நவம்பர்; 2014
- ↑ http://www.tamilvu.org/courses/degree/p101/p1011/html/p1011224.htm