கி. வா. ஜகந்நாதன்

சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்
(கி. வா. ஜகன்னாதன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கி. வா. ஜகந்நாதன் என்றழைக்கப்பட்ட கிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர்.[1] இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.[2] 1967-இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.[3] கம்பன் கழகம் இவரது நினைவாக கி. வா. ஜ பரிசை நிறுவி வழங்கி வருகிறது.

கி. வா. ஜகந்நாதன்
பிறப்புகிருஷ்ணராயபுரம் வாசுதேவ ஜகந்நாதன்
(1906-04-11)ஏப்ரல் 11, 1906
இறப்பு4 நவம்பர் 1988(1988-11-04) (அகவை 82)
சென்னை, தமிழ்நாடு
தொழில்தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர்
தேசியம்இந்தியர்
குறிப்பிடத்தக்க விருதுகள்சாகித்திய அகாதமி விருது (1967)
துணைவர்அலமேலு

பட்டங்கள்

தொகு

1933-இல் இவர் வித்துவான் பட்டம் பெற்றார் 1949-இல் திருமுருகாற்றுப்படை அரசு , 1951-இல் வாகீச கலாநிதி, 1982-இல் இராஜ சர் அண்ணாமலை செட்டியார் நினைவுப்பரிசு ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.[4]

கி. வா. ஜகந்நாதன் எழுதிய நூல்கள்

தொகு
  1. அதிகமான் நெடுமான் அஞ்சி
  2. அதிசயப் பெண்
  3. அப்பர் தேவார அமுது
  4. அபிராமி அந்தாதி
  5. அபிராமி அந்தாதி விளக்கம்
  6. அமுத இலக்கியக் கதைகள்
  7. அழியா அழகு
  8. அறப்போர் - சங்கநூற் காட்சிகள்
  9. அறுந்த தந்தி
  10. அன்பின் உருவம்
  11. அன்பு மாலை
  12. ஆத்ம ஜோதி
  13. ஆரம்ப அரசியல் நூல்
  14. ஆலைக்கரும்பு
  15. இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி
  16. இருவிலங்கு
  17. இலங்கைக் காட்சிகள்
  18. இன்பமலை -சங்கநூற் காட்சிகள்
  19. உதயம்
  20. உள்ளம் குளிர்ந்தது
  21. எல்லாம் தமிழ்
  22. எழில் உதயம்
  23. எழு பெருவள்ளல்கள்
  24. என் ஆசிரியப்பிரான்
  25. ஏற்றப் பாட்டுகள்
  26. ஒளிவளர் விளக்கு
  27. ஒன்றே ஒன்று
  28. கஞ்சியிலும் இன்பம்
  29. கண்டறியாதன கண்டேன்
  30. கதிர்காம யாத்திரை
  31. கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.
  32. கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 1
  33. கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 2
  34. கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 3
  35. கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 4
  36. கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 5
  37. கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் பாகம் - 6
  38. கரிகால் வளவன்
  39. கலைச்செல்வி
  40. கலைஞன் தியாகம்
  41. கவி பாடலாம்
  42. கவிஞர் கதை
  43. கற்பக மலர்
  44. கன்னித் தமிழ்
  45. காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதி
  46. காவியமும் ஓவியமும்
  47. கி.வா.ஜ பேசுகிறார்
  48. கி.வா.ஜ வின் சிலேடைகள்
  49. கிழவியின் தந்திரம்
  50. குமண வள்ளல்
  51. குமரியின் மூக்குத்தி
  52. குழந்தை உலகம்
  53. குறிஞ்சித் தேன்
  54. கோயில் மணி
  55. கோவூர் கிழார்
  56. சகல கலாவல்லி
  57. சங்கர ராசேந்திர சோழன் உலா
  58. சரணம் சரணம்
  59. சித்தி வேழம்
  60. சிரிக்க வைக்கிறார்
  61. சிலம்பு பிறந்த கதை
  62. சிற்றம்பலம் சுதந்திரமா!
  63. ஞான மாலை
  64. தமிழ் நாவல்கள் - நாவல் விழாக் கருத்துரைகள்
  65. தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்
  66. தமிழ் நூல் அறிமுகம்
  67. தமிழ் வையை - சங்கநூற் காட்சிகள்
  68. தமிழ்க் காப்பியங்கள்
  69. தமிழ்த் தாத்தா (உ.வே.சாமிநாத ஐயர்)
  70. தமிழ்ப் பழமொழிகள் - தொகுதி 1
  71. தமிழ்ப் பழமொழிகள் - தொகுதி 2
  72. தமிழ்ப் பழமொழிகள் - தொகுதி 3
  73. தமிழ்ப் பழமொழிகள் - தொகுதி 4
  74. தமிழ்ப்பா மஞ்சரி
  75. தமிழின் வெற்றி
  76. நாம் அறிந்த கி.வா.ஜ.
  77. நாயன்மார் கதை - முதல் பகுதி
  78. நாயன்மார் கதை - இரண்டாம் பகுதி
  79. தனி வீடு
  80. தாமரைப் பொய்கை -சங்கநூற் காட்சிகள்
  81. திரட்டுப் பால்
  82. திரு அம்மானை
  83. திருக்குறள் விளக்கு
  84. திருக்கோலம்
  85. திருமுருகாற்றுப்படை
  86. திருமுருகாற்றுப்படை-பொழிப்புரை
  87. திருவெம்பாவை
  88. தெய்வப் பாடல்கள்
  89. தேவாரம்-ஏழாம் திருமுறை
  90. தேன்பாகு
  91. நல்ல சேனாபதி
  92. நல்ல பிள்ளையார் # நவக்கிரகம்
  93. நாடோடி இலக்கியம்
  94. நாயன்மார் கதை - மூன்றாம் பகுதி
  95. நாயன்மார் கதை - நன்காம் பகுதி
  96. நாலு பழங்கள்
  97. பயப்படாதீர்கள் கி.வா.ஜ.
  98. பல கதம்பம்
  99. பல்வகைப் பாடல்கள்
  100. பவள மல்லிகை
  101. பாண்டியன் நெடுஞ்செழியன்
  102. பாரி வேள்
  103. பாற்கடல் (பலர் எழுதிய சிறுகதைகள்)
  104. பிடியும் களிறும் -சங்கநூற் காட்சிகள்
  105. பின்னு செஞ்சடை
  106. புகழ் மாலை
  107. புது டயரி
  108. புது மெருகு
  109. புதுவெள்ளம்-சங்கநூற் காட்சிகள்
  110. பெரிய புராண விளக்கம் பகுதி-1
  111. பெரிய புராண விளக்கம் பகுதி-2
  112. பெரிய புராண விளக்கம் பகுதி-4
  113. பெரிய புராண விளக்கம் பகுதி-5
  114. பெரிய புராண விளக்கம் பகுதி-6
  115. பெரிய புராண விளக்கம் பகுதி-7
  116. பெரிய புராண விளக்கம் பகுதி-8
  117. பெரிய புராண விளக்கம் பகுதி-9
  118. பெரிய புராண விளக்கம் பகுதி-10
  119. பெரும் பெயர் முருகன்
  120. பேசாத நாள்
  121. பேசாத பேச்சு
  122. மலையருவி (பதிப்பாசிரியர்)
  123. மனை விளக்கு-சங்கநூற் காட்சிகள்
  124. மாலை பூண்ட மலர்
  125. முந்நீர் விழா
  126. முருகன் அந்தாதி # முல்லை மணம்
  127. மூன்று தலைமுறை
  128. மேகமண்டலம்
  129. வழிகாட்டி வளைச் செட்டி - சிறுகதைகள்
  130. வாருங்கள் பார்க்கலாம்
  131. வாழ்க்கைச் சுழல்
  132. வாழும் தமிழ்
  133. விடையவன் விடைகள்
  134. விளையும் பயிர்
  135. வீரர் உலகம்

மேற்கோள்கள்

தொகு
  1. "The days of great Editors are over". இந்தியன் எக்ஸ்பிரஸ்.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "The patriarch of Tamil". தி ஹிந்து. Archived from the original on 2012-11-07. பார்க்கப்பட்ட நாள் 2010-08-03.
  3. Tamil Sahitya Akademi Awards 1955-2007 பரணிடப்பட்டது 2010-01-24 at the வந்தவழி இயந்திரம் சாகித்திய அகாதமி அதிகாரப் பூர்வ இணையதளம்.
  4. தமிழ்ப் பழமொழிகள், 2001, கி. வா. ஜகந்நாதன், சென்னை: ஜெனரல் பப்ளிஷர்ஸ், நூல் பின்னட்டை

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கி._வா._ஜகந்நாதன்&oldid=4050239" இலிருந்து மீள்விக்கப்பட்டது