கல்குளம் நீலகண்ட சுவாமி கோயில்
கல்குளம் நீலகண்ட சுவாமி கோவில் (Kalkulam Neelakandeswarar Temple) என்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்குளம் என்ற ஊரில் உள்ள கோயிலாகும். நாகர்கோவிலில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது பத்மநாபபுரம் அரண்மனை. அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராகத் திகழ்ந்த ஊர் இது. இங்குள்ள கல்குளம் என்னும் ஊரில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற நயினார் நீலகண்ட சுவாமி திருக்கோயில். கேரளப் பாணியிலும் தமிழ்நாட்டுப் பாணியிலும் கட்டுமானங்கள் அமைந்த கோயில் இது. மிகவும் பழமையான இந்தக் கோயிலில் ஏராளமான சிற்பங்களை நிறுவித் திருப்பணி செய்தவர் மன்னர் திருமலை நாயக்கர் ஆவார். கேரள மன்னரான மார்த்தாண்ட வர்மாவும் திருப்பணிகள் செய்து இந்த ஆலயத்தை அழகுப்படுத்தியிருக்கிறார். இங்கே பிராகாரத்தில் கையில் விளக்கு ஏந்திய அழகுப் பாவையர் சிலைகள் ஒரே வரிசையில் ஏராளமாக நிற்பது அழகான காட்சியாகும்.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Rajeev, Sharat Sunder (2017-03-10). "A temple with a hoary past". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2022-08-28.
- ↑ "Kalkulam Shiva Temple Near Thiruvananthapuram". பார்க்கப்பட்ட நாள் 2022-08-28.