கல்துர்க்கை கோட்டை

கல்துர்கை கோட்டை (Kaldurg Fort) என்பது இந்தியாவின் மகாராட்டிராவின் பால்கருக்கு கிழக்கே, கொங்கனின் வடக்குப் பகுதியில் சகாயாத்ரி மலைத்தொடரில் உள்ள ஒரு கோட்டையாகும். இது கடல் மட்டத்திலிருந்து குறைந்தது 475 மீட்டர் உயரத்தில் உள்ளது. இக்கோட்டையிலிருந்து அரபிக்கடலினையும் மேற்கில் உள்ள தொழில்துறை நகரமான பால்கர் மற்றும் கிழக்கே உள்ள சூரியா ஆற்றின் காட்சிகளைக் காணலாம்.[1]

கல்துர்க்கை கோட்டை
பால்கர் மாவட்டம், மகாராட்டிரம்
கல்துர்க்கை கோட்டை is located in இந்தியா
கல்துர்க்கை கோட்டை
கல்துர்க்கை கோட்டை
கல்துர்க்கை கோட்டை is located in மகாராட்டிரம்
கல்துர்க்கை கோட்டை
கல்துர்க்கை கோட்டை
ஆள்கூறுகள் 19°41′28.7″N 72°49′01.2″E / 19.691306°N 72.817000°E / 19.691306; 72.817000
வகை fort
இடத் தகவல்
மக்கள்
அனுமதி
yes
இட வரலாறு
உயரம் 475 மீட்டர்கள் (1,558 அடி)

கோட்டையின் செவ்வக வடிவத்தைத் தூரத்திலிருந்து எளிதாகக் காணலாம். இக்கோட்டைக் குறித்த வரலாற்றுச் சான்றுகள் எதுவும் இல்லை. இந்தக் கோட்டை செவ்வகப் பாறையால் மேல் பகுதி மற்றும் கீழ்ப் பகுதி எனப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பகுதிகளையும் சில படிகள் பிரிக்கின்றன.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. jain, piyush. "Trek to Kaldurg Fort - Weekend Getaway". Tripoto (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-23.
  2. "Culture & Heritage". palghar.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2018-06-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்துர்க்கை_கோட்டை&oldid=4054876" இலிருந்து மீள்விக்கப்பட்டது