கல்பனாகுமாரி தேவி
கல்பனாகுமாரி தேவி (Kalpanakumari Devi)(1936-28 ஆகத்து 2017) என்பவர் இந்திய நாவலாசிரியர் மற்றும் ஒடியா மொழியில் கவிஞர் ஆவார். தேவி ஒடியா இலக்கியத்திற்கான 2011-ல் சாகித்திய அகாதமி விருதை வென்றார்.
கல்பனாகுமாரி தேவி Kalpanakumari Devi | |
---|---|
பிறப்பு | 1936 கட்டாக், காதினாண்டா[1] |
இறப்பு | 28 ஆகத்து 2017 கொல்கத்தா |
மொழி | ஒடியா |
தேசியம் | இந்தியா |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | அச்சினா பாசுபூமி[2] |
குறிப்பிடத்தக்க விருதுகள் | சாகித்திய அகாதமி விருது |
துணைவர் | கந்தூரி சரண் தாசு[3] |
வாழ்க்கை
தொகுகல்பனாகுமாரி தேவி 1936-ல் ஒடிசாவில் பிறந்தார். இவர் 1958-ல் கொல்கத்தாவிற்கு குடிபெயர்ந்தார். இவரது முதல் நாவலான கபி 1954-ல் வெளியிடப்பட்டது.[4] நாட்டின் சமூக மாற்றங்கள் குறித்த இவரது அவதானிப்புகள் இதில் அங்கீகரிக்கப்பட்டன.
தேவி எழுதிய அச்சின்ஹா பசபூமி நாவலுக்காக 2011ஆம் ஆண்டு ஒடியா இலக்கியத்திற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.[4]
தேவி ஒடியா எழுத்தாளர் கந்தூரி சரண் தாசை மணந்தார். கந்தூரி சரண் 2014-ல் இறந்தார். இந்த இணையரின் மகள் சபர்னி தாசு பெங்காலி பத்திரிக்கையான பிரதாமாவின் ஆசிரியராக உள்ளார்.[5]
கல்பனாகுமாரி தேவி 28 ஆகத்து 2017 அன்று கொல்கத்தாவில் இறந்தார்.[6]
சர்ச்சை
தொகுகல்பனாகுமாரி தேவியின் அச்சின்ஹா பசபூமி சாகித்திய அகாதமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பிறகு, பல ஒடியா இலக்கியவாதிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.[7] நடைமுறை முறைகேடுகள் மற்றும் தேர்வில் உள்ள முக்கியமான வேறுபாடுகளைக் காரணம் காட்டி. ஆசிரியருக்கு விருது அறிவிக்கப்பட்டதும், சாகித்திய அகாதமியின் ஆலோசனைக் குழு உறுப்பினர் பரேந்திர கிருஷ்ண தால் எதிர்ப்பு தெரிவித்து பதவி விலகினார். ஒடியா எழுத்தாளர் சிறீ சரண் பிரதாப் கனிஷ்கா, சனவரி 2012-ல் ஒரிசா உயர் நீதிமன்றத்தில் விருதுக்கு எதிராக ஒரு பொது நல வழக்கு தொடர்ந்தார். இதனால் விருது வழங்கும் விழாவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. விருதுக்கு தகுதி பெறுவதற்கு, புத்தகம் 2007 மற்றும் 2009 க்கு இடையில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும், மேலும் புத்தகத்தின் வெளியீட்டாளர் அதன் வெளியீட்டுத் தேதியை 2009க்கு பின்னுக்குத் தள்ளிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் புத்தகம் 2010-ல் வெளியிடப்பட்டதாகக் கூறப்பட்டது.[8][9]
இந்த வழக்கு 14 பிப்ரவரி 2012 அன்று உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. மேலும் கல்பனாகுமாரி தேவி விருதைப் பெற்றார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்
தொகு- கபி. கல்கத்தா. 1954.
- நஸ்தச்சந்தா. கல்கத்தா: பிராணகிருஷ்ண தாசா. 1958.
- சுருஷ்டி ஓ பிரளயா. கல்கத்தா: பிராணகிருஷ்ண தாசா. 1959.
- சே பிரேமா நித்ர்னா. கல்கத்தா: ராஜஸ்ரீ பிரகாசனி. 1960.
- பானா கெட்டகி. ஒடிசா ஜகன்னாத கம்பனி. 1963.
- தினந்தரா ரங்கா. கல்கத்தா: ராஜஸ்ரீ பிரகாசனி. 1967.
- சுனிலா சிஹாரா. கல்கத்தா: ராஜஸ்ரீ பிரகாசனி. 1968.
- அச்சின்ஹா பாஸபூமி. ககானி. 2009.
மேற்கோள்கள்
தொகு- ↑ Orissa reference: glimpses of Orissa. TechnoCAD Systems. 2001.
- ↑ "HC stays Akademi Award for novel". newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 29 August 2017.
- ↑ "Odisha: Popular Detective novel writer Kanduri Charan das is no more, Odisha Current News, Odisha Latest Headlines". Archived from the original on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 29 August 2017.
- ↑ 4.0 4.1 .
- ↑ Bibhuti Patnaik (16 June 2014). "Life of a legend". The Telegraph (Calcutta). http://www.telegraphindia.com/1140616/jsp/odisha/story_18516801.jsp#.Vn5nERGl2FU.
- ↑ "ବିଶିଷ୍ଟ ସାହିତ୍ୟିକା କଳ୍ପନାକୁମାରୀ ଦେବୀଙ୍କ ପରଲୋକ". sambad.in (in ஒடியா). 2017-08-29. Archived from the original on 2017-08-29. பார்க்கப்பட்ட நாள் 2023-03-14.
- ↑ Namita Panda (31 December 2011). "Furore over award to Kalpanakumari". The Telegraph. http://www.telegraphindia.com/1111231/jsp/odisha/story_14945271.jsp#.Vn8gMRGl2FU.
- ↑ "HC Judgment on Odia Novel Today". New Indian Express. 14 February 2012 இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304204542/http://www.newindianexpress.com/states/odisha/article319471.ece.
- ↑ Dhrutikam Mohanty (15 January 2012). "Odia novel not Odia enough". The Sunday Indian இம் மூலத்தில் இருந்து 19 ஏப்ரல் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120419064630/http://www.thesundayindian.com/en/story/odia-novel-not-odia-enough/27/28148/.