கல்பனா காளகத்தி

கல்பனா கலாகத்தி (Kalpana Kalahasti) [1] (பிறப்பு: 1980) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இசுரோ) பணிபுரியும் இந்தியப் பெண் அறிவியலாளரும் விண்வெளி பொறியாளரும் ஆவார். இவர் சந்திரயான் - 3 திட்டத்தின் துணை திட்ட இயக்குநராக பணியாற்றுகிறார்.[2] இந்தியாவின் பல்வேறு செயற்கைக்கோள்களை உருவாக்குவதில் கல்பனா முதன்மைப் பங்கு வகித்துள்ளார் , மேலும் சந்திரயான் - 2 , மங்கள்யான் திட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.[3]

கல்பனா கே
Kalpana K
பிறப்பு1974 (அகவை 49–50)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிமின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியாளர்
செயற்பாட்டுக்
காலம்
2000–முதல்
அமைப்பு(கள்)இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO)

இளமையும் கல்வியும்

தொகு

கல்பனா 1980 இல் பெங்களூரில் பிறந்தார். கரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் வானூர்திப் பொறியியலில் பட்டம் பெற்றார்.[4]

தொழில் வாழ்க்கை

தொகு

2003 ஆம் ஆண்டில் இவர் இசுரோவில் அறிவியலாளராகச் சேர்ந்தார். ஆரம்ப ஆண்டுகளில் கல்பனா பல்வேறு செயற்கைக்கோள் திட்டங்களில் பணியாற்றினார். பல தகவல் தொடர்பு, தொலை உணர்வுத் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவுவதில் முதன்மையான பங்கு வகித்தார். துல்லியமான செயற்கைக்கோள் நிலைப்படுத்தலுக்கான உந்துவிசை அமைப்புகளை உருவாக்குவதில் இருந்து புவியின் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களைப் பிடிக்க மேம்பட்ட படிமமாக்கக் கருவிகளை வடிவமைப்பதில் அவர் முன்னணியில் உள்ளார். அவர் செவ்வாய் சுற்றுகலன் (மங்கள்யான்) திட்டத்திலும் சந்திரயான் - 2 திட்டத்திலும் பங்கேற்றார்ஆனார்.[5] 2019 ஆம் ஆண்டில் , சந்திரயான் - 3 திட்டத்தின் துணை திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்ட அவர் , நிலாத் தரையிறங்கி அமைப்புகளை வடிவமைத்து மேம்படுத்துவதில் முதன்மைப் பங்கு வகித்தார்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. Who is Kalpana Kalahasti, ISRO scientist behind Chandrayaan 3? - The Statesman, 24 August 2023
  2. Watta, Harnur. "Meet Kalpana K: Force Behind Historic Landing Of Chandrayaan-3". www.shethepeople.tv (in ஆங்கிலம்). Archived from the original on 2023-08-23. பார்க்கப்பட்ட நாள் 2023-08-23.
  3. "The Brains Behind Chandrayaan-3 Mission". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-23.
  4. Rangarajan, A. D. (2023-08-24). "Key member of Chandrayaan-3 mission makes Tirupati proud" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/key-member-of-chandrayaan-3-mission-makes-tirupati-proud/article67231371.ece. 
  5. "ചന്ദ്രയാന്റെ പിന്നിലെ നാരിശക്തി; സ്‌കൂളിലെ ബ്രില്യന്റ് സ്റ്റുഡന്റ് നിന്ന് ഡെപ്യൂട്ടി പ്രൊജക്റ്റ് ഡയറക്ടറിലേക്ക് എത്തിയ ബെംഗളൂരുകാരി; പത്മശ്രീ നൽകി രാജ്യം ആദരിച്ച ശാസ്ത്രജ്ഞ". Archived from the original on 2023-08-23. பார்க்கப்பட்ட நாள் 2023-08-23.
  6. Online |, E. T. (2023-08-23). "Most memorable moment for team Chandrayaan-3: Kalpana K, Deputy Project Director, Moon Mission". The Economic Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்பனா_காளகத்தி&oldid=4053726" இலிருந்து மீள்விக்கப்பட்டது