கல்பனா தேவி (அரசியல்வாதி)

கல்பனா தேவி (Kalpana Devi-பிறப்பு: ஆகத்துட் 9, 1969) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் இராசத்தான் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தற்போது இராசத்தான் லாட்புரா சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 16ஆவது இராசத்தான் சட்டப் பேரவையின் உறுப்பினராக உள்ளார்.[1] முன்னதாக, 2018 முதல் 2023 வரை இதே தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர் ஆவார்.[2][3][4][5]

கல்பனா தேவி
15ஆவது சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
திசம்பர் 11, 2018 (2018-12-11) – 3 திசம்பர் 2023 (2023-12-03)
தொகுதிலத்புரா
16ஆவது சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
திசம்பர் 3, 2023 (2023-12-03)
தொகுதிலத்புரா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு9 ஆகத்து 1969 (1969-08-09) (அகவை 55)
இந்தியா
தேசியம்இந்தியா
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
துணைவர்ஜெயராஜ் சிங் (1989)
பெற்றோர்
  • இராமேசுவர் சிங் (தந்தை)
வாழிடம்(s)பிரிஜ்ராஜ் பவான் அரண்மனை, மக்கள் குடியிருப்பு கோட்டா, இராசத்தான்

அரசியல்

தொகு

2018 இராசத்தான் சட்டப் பேரவைத் தேர்தலில் லாத்புரா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 104912 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார் கல்பனா தேவி.[6]

2023 இராசத்தான் சட்டப் பேரவைத் தேர்தலில் இவர் லாட்புரா சட்டமன்றத் தொகுதியிலிருந்து மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளர் நைமுதீன் குடுவை 25,522 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Ladpura, Rajasthan Assembly Election Results 2023 Highlights: Ladpura में Kalpana Devi ने 25522 मतों सेहासिल की जीत". आज तक (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-12-09.
  2. "Kalpana Devi (Bharatiya Janata Party (BJP)): Constituency- Ladpura (Kota) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2020-09-05.
  3. "Rajasthan Legislative Assembly". rajassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2020-09-05.
  4. "List of MLAs of Rajasthan Legislative Assembly 2018". Elections in India. பார்க்கப்பட்ட நாள் 2020-09-05.
  5. "Rajasthan assembly results: Here is the full list of winners". India Today (in ஆங்கிலம்). 11 December 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-09-05.
  6. "Ladpura Assembly constituency (Rajasthan): Full details, live and past results". News18. பார்க்கப்பட்ட நாள் 2020-09-05.