2023 இராசத்தான் சட்டப் பேரவைத் தேர்தல்

2023 இராசத்தான் சட்டப் பேரவைத் தேர்தல் (2023 Rajasthan legislative assembly election), இராசத்தான் சட்டப் பேரவையின் மொத்தமுள்ள 200 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் டிசம்பர், 2023க்குள் நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தல் ஆகும்.[2]தற்போது இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அசோக் கெலட் 2018ம் ஆண்டு முதல் முதலமைச்சராக உள்ளார்.[3]

2023 இராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல்

← 2018 25 நவம்பர் 2023 (199 இடங்கள்)
5 சனவரி 2024 (1 இடம்)
2028 →

இராஜஸ்தான் சட்டப் பேரவையில் 200 இடங்கள்
அதிகபட்சமாக 101 தொகுதிகள் தேவைப்படுகிறது
வாக்களித்தோர்75.33% Increase 0.61pp[1]
  Majority party Minority party
 

கட்சி பா.ஜ.க காங்கிரசு
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
சங்கனர் சர்தாபுரா
முந்தைய
தேர்தல்
38.08%, 73 இடங்கள் 39.30%, 100 இடங்கள்
வென்ற
தொகுதிகள்
115 70
மாற்றம் Increase 42 30
மொத்த வாக்குகள் 16,524,787 15,880,001
விழுக்காடு 41.69% 39.55%
மாற்றம் Increase 3.61pp Increase 0.23 pp


தேர்தலுக்குப் பிந்தைய இராஜஸ்தான் சட்டமன்றம்

முந்தைய முதலமைச்சர்

அசோக் கெலட்
காங்கிரசு

முதலமைச்சர்

பஜன்லால் சர்மா
பா.ஜ.க

பின்னணி

தொகு

தற்போதைய இராசத்தான் சட்டப் பேரவையின் பதவிக்காலம் 14 சனவரி 2024 உடன் முடிவடைகிறது.[4] எனவே டிசம்பர், 2023க்குள் இராசத்தான் சட்டப் பேரவையின் 200 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

தேர்தல் அட்டவணை

தொகு
தேர்தல் நிகழ்வுகள் நாள்[5] நாள்
அறிவிக்கை நாள் 30 அக்டோபர் 2023 திங்கள்
வேட்பு மனு தாக்கல் துவக்கம் 30 அக்டோபர் 2023 திங்கள்
வேட்பு மனு தாக்கல் இறுதி நாள் 6 நவம்பர் 2023 திங்கள்
வேட்பு மனு பரிசீலனை 7 நவம்பர் 2023 செவ்வாய்
வேட்பு மனு திரும்பப் பெறும் இறுதி நாள் 9 நவம்பர் 2023 வியாழன்
வாக்குப் பதிவு நாள் 25 நவம்பர் 2023 ஞாயிறு
வாக்கு எண்ணிக்கை நாள் 3 டிசம்பர் 2023 ஞாயிறு

அரசியல் கட்சிகள் & கூட்டணிகள்

தொகு

இத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் முக்கிய இடத்தை வகிக்கிறது.

கூட்டணி/கட்சி கொடி சின்னம் தலைவர் போட்டியிடும் தொகுதிகள்
இந்திய தேசிய காங்கிரசு+ இந்திய தேசிய காங்கிரசு     அசோக் கெலட் 199 200
இராஷ்டிரிய லோக் தளம்     கிருஷ்ணன் குமார் சரண் 1
பாரதிய ஜனதா கட்சி     இராஜேந்திர சிங் ரத்தொர் 200
பகுஜன் சமாஜ் கட்சி     பகவான் சிங் பாபா 43
இராச்டிரிய லோக்தந்திரிக் கட்சி + ஆசாத் சமாஜ் கட்சி இராச்டிரிய லோக்தந்திரிக் கட்சி     அனுமான் பெனிவால் 73 130
ஆசாத் சமாஜ் கட்சி     சந்திரசேகர் ஆசாத் இராவணன் 57
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)     அம்ரா ராம் 17[6]
ஆம் ஆத்மி கட்சி     நவீன் பலிவால் 86
அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன்     ஜமீல் கான் 11
இந்தியப் பொதுவுடமைக் கட்சி  
 
நரேந்திர ஆச்சார்யா 12
ஜனநாயக ஜனதா கட்சி     துஷ்யந்த் சவுதாலா 25
லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்)     12

கருத்துக் கணிப்புகள்

தொகு

1 நவம்பர் 2023 அன்று டைம்ஸ் நவ் பாரத் மற்றும் இடிஜி வெளியிட்ட கருத்துக் கணிப்பின்படி, பாரதிய ஜனதா கட்சி 114 முதல் 124; இந்திய தேசிய காங்கிரசு 68 முதல் 78 மற்றும் இதர கட்சிகள் 6 முதல் 10 தொகுதிகளைக் கைப்பற்றும்.[7]

தேர்தல் முடிவுகள்

தொகு

இத்தேர்தலில் மொத்தமுள்ள 199 சட்டமன்றத் தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 115 தொகுதிகளில் வென்று மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது.[8][9]



 

கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்

  பாரதிய ஜனதா கட்சி (41.69%)
  இந்திய தேசிய காங்கிரசு (39.53%)
  இராஷ்டிரிய லோக் தந்திரிக் கட்சி (2.39%)
  பகுஜன் சமாஜ் கட்சி (1.82%)
  பிறர் (14.57%)
Source
 
அரசியல் கட்சி பெற்ற வாக்குகள் வென்ற தொகுதிகள்
வாக்குகள் % ±விழுக்காடு போட்டியிட்ட தொகுதிகள் வென்ற தொகுதிகள் +/−
பாரதிய ஜனதா கட்சி 16,523,568 41.69% +3.67 199 115 42%
இந்திய தேசிய காங்கிரசு கூட்டணி இந்திய தேசிய காங்கிரசு 15,666,731 39.53% +0.24 198 69 31%
இராஷ்டிரிய லோக் தளம் 1 1 மாற்றமில்லை
Total 199 70 31
பாரத் ஆதிவாசி கட்சி 3 3
பகுஜன் சமாஜ் கட்சி 721,037 1.83% 184 2 4
இராஷ்டிரிய லோக்தந்திரிக் கட்சி 946,203 2.39% 78 1 2
பிற கட்சிகள்  – 4
சுயேச்சைகள் 8 5
நோட்டா 0.96%
மொத்தம் 100% - 199 -

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Electors Data Summary" (PDF). Election Commission of India (in ஆங்கிலம்).
  2. Arnimesh, Shanker. "BJP faces 'rebellion' as Vasundhara Raje & Uma Bharti get ready with rallies next month". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-04-28.
  3. "Ashok Gehlot takes oath as Rajasthan chief minister, Sachin Pilot as deputy". Hindustan Times (in ஆங்கிலம்). 2018-12-17. பார்க்கப்பட்ட நாள் 2022-02-13.
  4. "Terms of the Houses". Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2021-10-03.
  5. NDTV (9 October 2023). "Assembly Elections 2023 Date Live Updates: Polls In 5 States Next Month, Results On Dec 3" இம் மூலத்தில் இருந்து 9 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231009072747/https://www.ndtv.com/india-news/assembly-election-date-2023-madhya-pradesh-rajasthan-chhattisgarh-mizoram-telangana-live-updates-4463188. 
  6. CPI (M) [cpimspeak] (30 October 2023). "List of 17 candidates that will be contesting upcoming Assembly Elections in Rajasthan from CPI(M)" (Tweet). பார்க்கப்பட்ட நாள் 2023-10-30.
  7. Times Now Navbharat - ETG Opinion Poll Prediction
  8. ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2023
  9. Rajasthan Assembly Elections Results 2023