கல்போங் ஆறு

கல்போங் ஆறு (Kalpong River) என்பது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள வடக்கு அந்தமான் தீவுகளில் ஓடும் ஆறாகும்.[1] இது சாடில் சிகரத்திலிருந்து உருவாகிறது.[2] கல்போங் ஆறு வடக்கு திசையில் சுமார் 35 கிலோமீட்டர் நீளத்திற்குப் பயணிக்கிறது. இது திக்லிபூருக்கு அருகே கிழக்கு கடற்கரையில் ஏரியல் பே சிறுகுடா கலக்கிறது.[3] Kalpong Hydroelectric project having capacity of 5.25 MW,[3] இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்போங் நீர்மின் திட்டம் 5.25 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்டது.[3] வடக்கு அந்தமானில் முதல் நீர் மின்சார திட்டம் இந்த ஆற்றில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 14.83 மில்லியன் அலகு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Ghosh Shopna (1 September 2008). Introducing Geography 2 (Revised Edition), 2/E. Pearson Education India. pp. 88–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-317-2249-7.
  2. Characterization of Foundation Rock of Kalpong H.E. Project in North Andaman பரணிடப்பட்டது 10 ஏப்பிரல் 2009 at the வந்தவழி இயந்திரம், Central Soil and Materials Research Station (CSMRS)
  3. 3.0 3.1 3.2 3.3 Jaiswal, O.N.. "Andaman's First Hydel Power Project". PIB Features. India. http://pib.nic.in/feature/feyr2001/fnov2001/f231120011.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்போங்_ஆறு&oldid=3521623" இலிருந்து மீள்விக்கப்பட்டது