கல்முனைப் படுகொலைகள்

கல்முனைப் படுகொலைகள் (Kalmunai massacre) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை நகரில் 1990 சூன் மாதத்தில் இடம்பெற்றன. இலங்கைத் தரைப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட பொதுமக்கள் மீதான இப்படுகொலைகள் முன்னதாக இலங்கைக் காவல்துறையினர் மீது இடம்பெற்ற படுகொலைகளுக்கு பழிதீர்க்கும் நடவடிக்கையாகக் கருதப்படுகின்றது. சுமார் 250 பொதுமக்கள் காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டனர் என யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு ஆவணப்படுத்தியுள்ளது.[2][3][4] 160 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.[5][6]

கல்முனைப் படுகொலைகள்
இடம்கல்முனை, கிழக்கு மாகாணம், இலங்கை
நாள்20 யூன் 1990
தாக்குதலுக்கு
உள்ளானோர்
தமிழர்
இறப்பு(கள்)160-250
தாக்கியோர்இலங்கை இராணுவம், முஸ்லிம் ஊர்காவல்படை[1]

பொதுமக்கள் படுகொலை

தொகு

1990 சூன் 11 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் காவல்துறையினரைப் படுகொலை செய்ததை அடுத்து, கல்முனை நகர் மீது இராணுவத்தினர் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வந்தனர். இதன் காரணமாக, விடுதலைப் புலிகள் கல்முனை நகரில் இருந்து வெளியேறினர். இதனை அடுத்து பொதுமக்கள் மீதான இராணுவத்தினரின் தாக்குதல் 1990 சூன் 20 இல் ஆரம்பமானது.[2] இலங்கைத் தரைப்படையினர் கல்முனை வாடி வீட்டு சந்தியில் நிலைகொண்டு, தமிழ்ப் பொதுமக்களைக் கடத்தினர் என்றும், பின்னர் அவர்கள் அனைவரையும் முசுலிம்களுக்கு சொந்தமான கடைகளுக்குப் பின்னால் வைத்து எரியூட்டட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இறந்தவர்களின் எண்ணிக்கை சரிவரத் தெரியாவிட்டாலும், சுமார் 160 பேர் கொல்லப்பட்டனர் என உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.[5] ஆனாலும், 250 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர் என யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.[2][3]

மேலும் தாக்குதல்கள்

தொகு

1990 சூன் 27 இல், 75 பொதுமக்கள் இலங்கைத் தரைப்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு, பின்னர் எரியூட்டப்பட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 27 பேரின் தலையற்ற உடல்கள் கல்முனைக் கடற்கரையில் கரையொதுங்கியதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்தது. மொத்தமாக 7,000 பேர் வரை 1990 சூன் மாதத்தில் கொல்லப்பட்டனர் என அவ்வமைப்பு தெரிவித்தது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "காத்தான்குடி பள்ளிவாசல் மீதான தாக்குதலை புலிகள் மேற்கொண்டார்களா? 26 வருடங்கள் கழித்து வெளிவரும் உண்மைகள் !!!!". Archived from the original on 2016-08-15. பார்க்கப்பட்ட நாள் 2022-02-11.
  2. 2.0 2.1 2.2 "CHAPTER 2". யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு. UTHR. 2001. பார்க்கப்பட்ட நாள் 26-10-2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. 3.0 3.1 3.2 "THE EAST : LOOKING BACK". யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு. UTHR. 2001. பார்க்கப்பட்ட நாள் 26-10-2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Human rights and The Issues of War and Peace". யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு. UTHR. 2001. பார்க்கப்பட்ட நாள் 26-10-2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. 5.0 5.1 "SRI LANKA: THE UNTOLD STORY". Asia Times. Asia Times. 2001. Archived from the original on 2012-07-21. பார்க்கப்பட்ட நாள் 26-10-2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |= ignored (help)
  6. "Sri Lanka: The Northeast: Human rights violations in a context of armed conflict". Archived from the original on 2009-02-14. பார்க்கப்பட்ட நாள் 2013-07-13.

மேலும் படிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்முனைப்_படுகொலைகள்&oldid=4055449" இலிருந்து மீள்விக்கப்பட்டது