கல்யாணி அணை
கல்யாணி அணை (Kalyani Dam) என்பது இந்தியாவின் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி நகரில் சுவர்ணமுகி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஈர்ப்பு அணை ஆகும். இந்த அணை திருப்பதி நகரம் மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு நீர் வழங்கும் முக்கிய ஆதாரமாக உள்ளது. இந்த அணை முழுமையாக நிரம்பினால், குறைந்தது இரண்டு வருடங்களாவது திருப்பதியின் நீர் தேவைகளை பூர்த்தி செய்ய வல்லது.[1]
கல்யாணி அணை | |
---|---|
அதிகாரபூர்வ பெயர் | கல்யாணி அணை |
நாடு | இந்தியா |
அமைவிடம் | திருப்பதி, சித்தூர் மாவட்டம், ஆந்திரப்பிரதேசம் |
புவியியல் ஆள்கூற்று | 13°39′27.5″N 79°16′9.4″E / 13.657639°N 79.269278°E |
நோக்கம் | பாசனம், குடிநீர் |
உரிமையாளர்(கள்) | ஆந்திரப்பிரதேச அரசு |
அணையும் வழிகாலும் | |
வகை | ஈர்ப்பு வகை |
தடுக்கப்படும் ஆறு | சுவர்ணமுகி ஆறு |
நீர்த்தேக்கம் | |
நீர்ப்பிடிப்பு பகுதி | 48.56 km2 (18.75 sq mi) |
வரலாறு
தொகுஇந்த அணை 1977ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.[1]
இடம்
தொகுசேசாசலம் மலைத்தொடர்களின் ஒரு பகுதியாக இருக்கும் மலைகளுக்கு இடையில் 25 மில்லியன் கன மீட்டர் சேமிப்பு திறன் கொண்ட இந்த அணை சுவர்ணமுகி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது .[1][2]
தகவல்கள்
தொகு- நீர்ப்பிடிப்பு பகுதி: 48.56 km2 (18.75 sq mi)
- அணையின் அமைவிடம்: திருப்பதி, சித்தூர் மாவட்டம், ஆந்திரா
- முழு நீர்த்தேக்க நிலை: 274.31 மீட்டர்கள் (900 அடி) எம்.எஸ்.எல்
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Two spillway gates of Kalyani Dam lifted". Retrieved 23 November 2015.
- ↑ "Kalyani Dam D03636". Archived from the original on 4 மார்ச் 2016. Retrieved 23 November 2015.