கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில், நாராயணவனம்

ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வரர் சுவாமி கோயில் (Sri Kalyana Venkateswaraswamy Temple) இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் சித்துாா் மாவட்டத்தில் உள்ள நாராயணவனம் என்ற நகரத்தில் அமைந்துள்ள ஒரு இந்து வைணவ கோயில் ஆகும்.[1][2] இந்த கோயில் விஷ்ணுவின் அவதாரமான கல்யாண வெங்கடேஸ்வரருக்கு அா்பணிக்கப்பட்டுள்ளது.[2] புட்டூருக்கு கிழக்கே 2 கி.மீ தொலைவிலும், திருப்பதிக்கு தெற்கே 45 கி.மீ தொலைவிலும் இந்த கோயில் அமைந்துள்ளது.[1] வெங்கடேஸ்வரா் இந்த இடத்தில் பத்மாவதியை மணந்து பின்னா் திருமலைக்குச் சென்றாா் என்று நம்பப்படுகிறது.

புராணம் தொகு

புராணத்தின் படி இந்த பிராந்தியத்தை ஆளுகின்ற அகசராஜ மன்னனின் தலைநகரம் நாராயணவனம்.[சான்று தேவை] திருப்பசல, வெங்கடேஸ்வரா் கோயிலின் முதன்மை தெய்வமான வெங்கடேஸ்வரரை, திருச்சனுாா் பத்மாவதி கோயிலின் முதன்மை தெய்வமான அகசராஜா தனது மகள் பத்மாவதியின் திருமணத்தை இந்த இடத்தில் நிகழ்தினாா்.[2]

வரலாறு தொகு

கி.பி1541 ஆம் ஆண்டில் இந்த கோயில் நிர்மாணிக்கப்பட்டது.[1] இது பிற்காலத்தில் விரிவுபடுத்தப்பட்டது.

நிா்வாகம் தொகு

தற்போது இந்தக் கோயிலை திருமலை திருப்பதி தேவஸ்தானங்கள் நிா்வகித்து வருகின்றன. [மேற்கோள் தேவை]

பூஜைகள் மற்றும் பண்டிகைகள் தொகு

வைகனாச ஆகமத்தின் படி தினசாி சடங்குகள் நடத்தப்படுகின்றன.[சான்று தேவை]

குறிப்புகள் தொகு