கல்லட்டி அருவி

(கல்லட்டி நீர் வீழ்ச்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கல்லட்டி நீர் வீழ்ச்சி தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலம் அருகே மைசூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது.

அமைவிடம்தொகு

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் கல்லட்டி நீர் வீழ்ச்சியும் ஒன்று. உதகையிலிருந்து மைசூர் செல்லும் சாலையில் உள்ள உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட கல்லட்டி மலைப்பாதையில் அமைந்துள்ளது இந்த நீர் வீழ்ச்சி.[1][2][3][4][5][6][7]

சுற்றுலா செல்ல உகந்த பருவம்தொகு

நீலகிரி மாவட்டத்தில் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்க்கும்.முதுமலை மற்றும் மசினகுடி பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் இங்கு சென்று இளைப்பாறுவது மட்டுமின்றி, புகைப்படங்கள் எடுத்துச் செல்வது வழக்கம்.

பராமரிப்புதொகு

தமிழக வனத்துறையின் கீழ் உள்ள இந்நீர்வீழ்ச்சியை ஒட்டியுள்ள பூங்காவில் 10 ஆண்டுகளுக்கு முன்பு இருக்கைகள், காட்சிமுனை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் இவை சரியான பராமரிப்பின்றி இருப்பதாலும், கல்லட்டிக்கு முறையான சாலை வசதிகள் இல்லாததாலும், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

மேற்கோள்கள்தொகு

  1. "OOTY / UDHAGAI / UDHAGAMANDALAM / OOTACAMUND". nilgiris.tn.gov.in. பார்த்த நாள் 2011-09-23.
  2. "Amazing Kalhatty Waterfalls". tamilnadutourism.org. பார்த்த நாள் 2011-09-23.
  3. "Kalhatty water falls". ooty.ind.in. பார்த்த நாள் 2011-09-23.
  4. "Kalhatty water falls". smartcabs.org. பார்த்த நாள் 2011-09-23.
  5. "Kalhatty water falls". amudhasurabi.com. பார்த்த நாள் 2011-09-23.
  6. "Kalhatty water falls". tamilnadu.com. பார்த்த நாள் 2011-09-23.
  7. "Amazing Kalhatty Waterfalls". photography-edu.com. பார்த்த நாள் 2011-09-23.

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லட்டி_அருவி&oldid=2584493" இருந்து மீள்விக்கப்பட்டது