கல்லுக்குறிக்கி காலபைரவர் கோயில்
கல்லுக்குறிக்கி காலபைரவர் கோயில் என்பது கிருட்டிணகிரி மாவட்டம், கிருட்டிணகிரியில் இருந்து 4 கி.மீ தொலைவில் பழைய குப்பம் சாலையில் கல்லுக்குறிக்கியில் பெரிய ஏரிக்கரையில் உள்ள ஒரு காலபைரவர் கோயிலாகும்.[1] இக்கோயில் திருப்பணிகளின்போது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் கிடைத்துளது இக்கோயிலிலன் பழமையைக் காட்டுவதாக உள்ளது. கோயிலின் தலமரம் ஆத்தி மரம் ஆகும்.
அருள்மிகு காலபைரவர் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கிருஷ்ணகிரி |
அமைவிடம்: | கல்லுக்குறிக்கி |
மக்களவைத் தொகுதி: | கிருஷ்ணகிரி |
கோயில் தகவல் | |
மூலவர்: | காலபைரவர் |
சிறப்புத் திருவிழாக்கள்: | தேய்ப்பிறை அட்டமி |
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயிலில் விசாலமான வெளிமண்டபம், கொடிக்கம்பம் போன்றவற்றுடன் அமைந்துள்ளது. கோயில் பிரகாரத்தில் தென்முகக்கடவுள், வள்ளி தெய்வானையுடன் முருகன் போன்றோர் உள்ளனர். கோயிலில் ஒரு மேடையில் இரண்டு அடி உயரமுள்ள காலபைரவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் காலபைரவர் சுயம்புலிங்கமாக உள்ளார். லிங்கத்தின் நெற்றியில் சூலம் அமைந்துள்ளது. இந்த சுயம்பு லிங்கத்தைக் காண கல்லாலான பலகணி அமைக்கப்பட்டுள்ளது. பலகணியில் உள்ள துளைகள் வழியாகவே லிங்கத்தைக் காண இயலும். பைரவரின் வாகனமானது கருங்கல்லால் இருந்தாலும் இது பிரதிட்டை செய்யப்படாமல் அருகிலேயே வைக்கப்பட்டுள்ளது. உற்சவர் புறப்படும்போது கல்லாலான இந்த வாகனத்தையும் சுவாமியின் முன் சுமந்து செல்கின்றனர். மற்ற நேரங்களில் இவரை தூக்க இயலாது என கூறுகின்றனர்.[2]
இக்கோயிலுக்கு செங்குந்த முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பரம்பரை பரம்பரையாக பூஜை செய்து வருகிறார்கள்.[3]
சிறப்பு நாட்கள்
தொகுஒவ்வொரு திங்கட்கிழமையன்றும் சிறப்புப் பூசைகள் நடத்தப்படுகின்றன. ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை இராகுகாலத்தில் பைரவருக்கு சிறப்பு அபிடேகம் செய்யப்படுகிறது. தேய்ப்பிறை அட்டமியன்று சிறப்பு யாகம் நனத்தப்படுகிறது. ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுற்றியுள்ள கிராம மக்களால் திருவிழா நடத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "கால பைரவர் கோயில் கும்பாபிஷேக விழா தொடக்கம்". செய்தி. தினமணி. 16 சூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 30 சூன் 2018.
- ↑ திருக்கோயில்கள் வழிகாட்டி கிருஷ்ணகிரி மாவட்டம். தர்மபுரி: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை. 2014 ஆகத்து. pp. 25–30.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ "சிவலிங்க வடிவில் அருளும் ஸ்ரீகாலபைரவர்!". விகடன். 2017. https://www.vikatan.com/spiritual/temples/134746-krishnagiri-kalabhairavar-temple-worship.