சுயம்புலிங்கம்

சுயம்புலிங்கம் என்பது மனிதர்களால் செய்யப்படாமல் இயற்கையாகத் தானே தோன்றிய இலிங்கம் என வகைப் படுத்துகின்றனர்.[1] உலகத்திலேயே அதிகமான சுயம்புலிங்கங்கள் இந்தியாவில் உள்ளன. அவற்றில் தமிழ்நாட்டில் மட்டும் 44,000 சுயம்புலிங்கங்கள் உள்ளதாக அறியப்படுகிறது.[சான்று தேவை]

பண்டைக்காலத்தில் மரமாக இருந்து பிரளயகாலத்தில் மண்ணுக்குள் புதைந்து படிமம் ஆகி, மரமானது கல்மரம் ஆகிவிடுகிறது. இவ்வாறான கல்மரங்கள் லிங்கவடிவில் இருப்பதைச் சுயம்புலிங்கம் என்கின்றனர். மதுரையில் உள்ள கடம்பமரத்தின் படிமம் ஆகும். மதுரைக்கு அருகே உள்ள திருப்பூவணத்தில் பாரிசாதமரத்தின் பூவினுடைய காம்புப் பகுதி படிமம் ஆகிச் சிவலிங்கமாக உள்ளது என்கிறது திருப்பூவணம் புராணம்.[சான்று தேவை]

விண்ணிலிருந்து இறங்கிய கல் ஒன்று படிமம் ஆகிக் காசியில் சுயம்பு லிங்கமாக உள்ளது. கும்பகோணத்தில் அமிர்தக்குடம் இலிங்கமாக உள்ளதாகப் புராணம் குறிப்பிடுகிறது.[சான்று தேவை]

மேற்கோள்கள்

தொகு
  1. "சிவலிங்கம் காட்டுவது என்ன". http://www.ujiladevi.in/2012/03/blog-post_23.html. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுயம்புலிங்கம்&oldid=3913663" இலிருந்து மீள்விக்கப்பட்டது