கல்வியொழுக்கம்

கல்வியொழுக்கம் என்னும் நூல் பிற்கால ஔவையார் ஒருவரால் பாடப்பட்ட பல நூல்களில் ஒன்று. செந்தமிழ் இதழ் ஆசிரியர் இதனைக் குறிப்பிடுகிறார்.

"கல்வியொழுக்கம் என்பது ஒரு நூல். இது மொழிக்கு முதலாம் எழுத்துக்களின் அடைவே நாற்சீர் அடியான் வருவது" என அவர் குறிப்பிடுகிறார்.

இந்த நூலிலிருந்து அவர் தரும் எடுத்துக்காட்டு

ஈட்டிய பொருளின் எழுத்தே உடைமை
சிறுமையிற் கல்வி சிலையில் எழுத்தே

இந்த நூலின் காலம் நாம் தெளிவுபடுத்திக்கொண்ட 6 ஔவையார் பட்டியலில் இணைக்கப் போதிய சான்று இல்லாவிட்டாலும் ஆத்திசூடி, கொன்றை வேந்தன் நூல்களில் உள்ளது போல் வருக்க எழுத்து வரிசையும், பொருளமைதியும் கொண்ட நூல் எனக் குறிப்பிடப்படுவதால் அந்த நூல்கள் தோன்றிய 12ஆம் நூற்றாண்டு இந்த நூலின் காலம் எனக் கொள்வது பொருத்தமானது.

கருவிநூல்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்வியொழுக்கம்&oldid=1154396" இலிருந்து மீள்விக்கப்பட்டது