கல்வி தொலைக்காட்சி (தமிழ்நாடு)

கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளுக்காக தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ள தொலைக்காட்சி அலைவரிசை

கல்வி தொலைக்காட்சி (Education TV) என்பது தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையால் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளுக்காக தொடங்கப்பட்டுள்ள ஒரு அலைவரிசை ஆகும். இத்தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் 2019 ஆம் ஆண்டு ஆகத்து 26 ஆம் நாள் முதல் ஒளிபரப்பப்படுகிறது. கல்வி தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் தொடங்கும் விழாவானது சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கல்வித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். [1]

இத்தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை அரசு கம்பிவழித் தொலைக்காட்சியில் 200 எண் கொண்ட அலைவரிசையில் காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தொலைக்காட்சியில் பள்ளி மாணவர்களுக்கான கல்வி தொடர்பான நிகழ்ச்சிகள், வேலைவாய்ப்பு மற்றும் சுய தொழில் கற்றல் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.[2]கல்வியாளர்களின் கலந்துரையாடல்கள், நுழைவுத் தேர்வு குறித்த விளக்கங்கள் புதிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர்களின் நேர்காணல், கல்வி உதவித்தொகைகளுக்கு விண்ணப்பிக்கும் முறை, மாணவர்களின் புதிய கண்டு பிடிப்புகள், பாட வல்லுனர்கள் நடத்தும் சிறப்பு வகுப்புகள், விளையாட்டுப் போட்டிகள் போன்றவை கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ள மேலும் சில நிகழ்ச்சிகள் ஆகும்.[3]

மேற்கோள்கள்தொகு

  1. ""கல்வி தொலைக்காட்சி" - இன்று தொடக்கம்". தந்தி தொலைக்காட்சி (26 ஆகத்து 2019). பார்த்த நாள் 28 ஆகத்து 2019.
  2. "அரசு கேபிளில் 200வது அலைவரிசையில் கல்வி தொலைக்காட்சி - முதல்வர் பழனிசாமி". இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் (25 ஆகத்து 2019). பார்த்த நாள் 28 ஆகத்து 2019.
  3. "தமிழக அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்". மாலைமலர் (26 ஆகத்து 2019). பார்த்த நாள் 28 ஆகத்து 2019.

வெளியிணைப்புகள்தொகு